"ஒரு ஓட்டு கூட மிஸ் ஆகாது" - திருச்சி கிழக்கு தொகுதி அதிமுக வேட்பாளர் ராஜசேகரன் வீடு வீடாக சென்று வாக்கு சேகரிப்பு!

MsdMsd
Apr 12, 2026 - 22:03
"ஒரு ஓட்டு கூட மிஸ் ஆகாது" - திருச்சி கிழக்கு தொகுதி அதிமுக வேட்பாளர் ராஜசேகரன் வீடு வீடாக சென்று வாக்கு சேகரிப்பு!

தமிழக சட்டமன்றத் தேர்தல் வரும் 23ஆம் தேதி நடைபெற உள்ள நிலையில், தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில், திருச்சி கிழக்கு தொகுதியில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர் ராஜசேகரன், தொகுதி முழுவதும் தீவிர சுற்றுப்பயணம் மேற்கொண்டு பிரச்சாரம் செய்து வருகிறார்.

அந்தவகையில் இன்று (ஏப்.12) கிழக்கு தொகுதிக்கு உட்பட்ட சிந்தாமணி சுற்றுவட்டார பகுதிகளில் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். முன்னதாக அப்பகுதியில் உள்ள அண்ணா சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். அதனை தொடர்ந்து சிந்தாமணி பகுதியில் ஒவ்வொரு வீதியாக நடந்து சென்று பொது மக்களை சந்தித்து, திமுக அரசின் ஊழல்களையும், அதிமுக அரசின் சாதனைகளையும், தேசிய ஜனநாயக கூட்டணியின் தேர்தல் வாக்குறுதிகளையும் எடுத்துக்கூறி இரட்டை இலை சின்னத்திற்கு வாக்களிக்குமாறு கேட்டுக் கொண்டார்.

வேட்பாளர் ராஜசேகரன் பிரச்சாரத்திற்கு செல்லும் இடங்களில் பொதுமக்கள் ஆரத்தி எடுத்து, மாலை அணிவித்து, தங்களது குடும்பத்தில் ஒருவராக பாவித்து, உற்சாக வரவேற்பு அளித்து வருகின்றனர். இந்த தேர்தல் பிரச்சாரத்தின் போது தேசிய ஜனநாயக கூட்டணி கட்சிகளின் மாவட்ட தலைவர்கள், நிர்வாகிகள், தொண்டர்கள் உட்பட பலர் கலந்து கொண்டு, இரட்டை இமை சின்னத்திற்கு வாக்கு சேகரித்தனர்.