திருச்சி ஆகாஷ் கல்வி சேவைகள் நிறுவனத்தில் JEE தேர்வுப் பயிற்சியை வலுப்படுத்த ‘ஆகாஷ் இன்விக்டஸ் - இன்ஜினியரிங் 2.0’ திட்டம் அறிமுகம்!
இந்தியாவின் முன்னணி போட்டித் தேர்வு பயிற்சி நிறுவனங்களில் ஒன்றான ஆகாஷ் கல்விச் சேவைகள் நிறுவனம் (AESL), பொறியியல் படிப்புகளுக்கான தேர்வுத் தயாரிப்பை மேலும் வலுப்படுத்தும் வகையில் ‘ஆகாஷ் இன்விக்டஸ் – இன்ஜினியரிங் 2.0’ (Aakash INVICTUS - Engineering 2.0) என்ற புதிய திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. ஜே.இ.இ. மெயின் (JEE Main), ஜே.இ.இ. அட்வான்ஸ்டு (JEE Advanced), பிட்சாட் (BITSAT) மற்றும் மாநில அளவிலான சி.இ.டி. (CET) பொறியியல் நுழைவுத் தேர்வுகளுக்குத் தயாராகும் மாணவர்களுக்கு திட்டமிட்ட, உயர்தர கல்வி முறையை வழங்கும் நோக்கத்துடன் இத்திட்டம் உருவாக்கப்பட்டுள்ளது.
திருச்சி கரூர் பைபாஸ் சாலையில் அமைந்துள்ள ஆகாஷ் மையத்தில் இதற்கான அறிமுக விழா சிறப்பான முறையில் நடைபெற்றது. மாணவர்கள் வகுப்பறை, பாடப்புத்தகங்கள், தேர்வுகள் மற்றும் வழிகாட்டுதல் என ஒவ்வொரு நிலையிலும் புதிய அனுபவத்தைப் பெறும் வகையில் இத்திட்டம் ஆறு முக்கியத் தூண்களை அடிப்படையாகக் கொண்டு வடிவமைக்கப்பட்டுள்ளது.
வகுப்புகள், பயிற்சி அமர்வுகள் மற்றும் மறுபயிற்சி முறைகள் அனைத்தும் மாணவர்கள் நுழைவுத் தேர்வுகளில் சிறந்த தரவரிசை பெறுவதை மட்டுமே இலக்காகக் கொண்டு திட்டமிடப்படுகின்றன. ஆழ்ந்த ஆராய்ச்சியின் அடிப்படையில் இன்விக்டஸ் பாடத்திட்டம், பாடப்புத்தகங்கள் மற்றும் தேர்வு முறைகளை ஆகாஷ் நிறுவனத்தின் அனுபவம் மிக்க ஆசிரியர்கள் குழு முழுமையாக மறுசீரமைத்துள்ளது.
எளிய அடிப்படைகளில் தொடங்கி, கடினமான வினாக்களையும் மாணவர்கள் எளிதாகத் தீர்க்கும் திறனைப் படிப்படியாக வளர்க்கும் வகையில் புத்தகங்கள் மாற்றி அமைக்கப்பட்டுள்ளன. தேர்வுகளின் எண்ணிக்கை, ஆழம் மற்றும் கடினத்தன்மை சரியாகப் பராமரிக்கப்பட்டு, மாணவர்களின் பலம் மற்றும் பலவீனங்களைத் துல்லியமாகச் சுட்டிக்காட்டும் வகையில் தேர்வுகள் நடத்தப்படும். மாணவர்கள் தற்போது எந்த நிலையில் உள்ளனர், இலக்கை அடைய அவர்கள் செல்ல வேண்டிய பாதை எது என்பதை மாணவர்களும் பெற்றோர்களும் தெளிவாக அறிந்துகொள்ளும் வசதி.
ஜோசா (JoSAA) கலந்தாய்வு வழிகாட்டுதல், சந்தேகத் தெளிவுரைகள் மற்றும் வகுப்பு நேரத்தைத் தாண்டியும் தொடர்ந்து வழங்கப்படும் கல்வி ஆதரவு ஆகியவை உறுதி செய்யப்படுகின்றன. மாணவர்களின் கற்றல் திறன் மற்றும் லட்சியத்திற்கு ஏற்ப மன அழுத்தமில்லாத கல்வியை வழங்க ஏஸ் (Ace), அச்சீவர் (Achiever), அக்சலரேட்டர் (Accelerator), மற்றும் அப்பெக்ஸ் (Apex) ஆகிய 4 சிறப்புக் குழுக்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன.
இத்திட்டம் குறித்து ஆகாஷ் எஜுகேஷனல் சர்வீசஸ் லிமிடெட் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநரும் தலைமைச் செயலதிகாரியுமான சந்திர சேகர் ரெட்டி கூறுகையில்:-
ஆகாஷ் இன்விக்டஸ் – இன்ஜினியரிங் 2.0 திட்டம், முதலிடங்களை உருவாக்கிய பல வருட அனுபவம் கொண்ட எங்கள் சிறந்த ஆசிரியர்களால் உருவாக்கப்பட்டுள்ளது. சில குறிப்பிட்ட மையங்களில் மேற்கொள்ளப்பட்ட பரிசோதனை முயற்சியில் 2026 ஜே.இ.இ. தேர்வு முடிவுகள் வியக்கத்தக்க வகையில் அமைந்தன. தற்போது இத்திட்டத்தை இந்தியாவில் உள்ள அனைத்து ஆகாஷ் கிளைகளுக்கும் கொண்டு வருகிறோம். இது மாணவர்கள் சிறந்த தரவரிசையைப் பெற பெரிதும் உதவும். 2027 மற்றும் 2028 ஜே.இ.இ. தேர்வுகள் ஆகாஷ் வரலாற்றிலேயே மிகச்சிறந்த முடிவுகளை வழங்கும் என்பதில் நாங்கள் உறுதியாக இருக்கிறோம். 'சிறப்பு என்பது ஏன் சிலருக்கு மட்டுமே சொந்தமாக இருக்க வேண்டும்?' என்பதே எங்கள் கேள்வி," என்று தெரிவித்தார். இத்திட்டம் நாட்டின் அனைத்து ஆகாஷ் கிளைகளிலும் உடனடியாக நடைமுறைப்படுத்தப்படுகிறது. ஏற்கனவே பயிலும் மாணவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்பட்டு, படிப்படியாக புதிய மாணவர்களுக்கும் இம்முறை விரிவுபடுத்தப்படும். இது குறித்து பெற்றோர்களுக்கும் மாணவர்களுக்கும் தெளிவுபடுத்த சிறப்பு வழிகாட்டுதல் அமர்வுகளும் நடத்தப்பட்டு வருகின்றன. பெற்றோர்களும் மாணவர்களும் 7303759494 என்ற தொலைபேசி எண்ணிலோ அல்லது support.invictus@aesl.in என்ற மின்னஞ்சல் முகவரியிலோ தொடர்பு கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.