கார்த்தி சிதம்பரம் எம்.பி. பிறந்தநாள் - திருச்சியில் சிறப்பு வழிபாடு மற்றும் அன்னதானம் வழங்கி கொண்டாட்டம்!
சிவகங்கை நாடாளுமன்ற உறுப்பினர் கார்த்தி ப.சிதம்பரம் பிறந்தநாளை முன்னிட்டு, திருச்சி மாவட்ட காங்கிரஸ் நிர்வாகிகள் சார்பில் சிறப்பு வழிபாடு மற்றும் அன்னதானம் வழங்கும் நிகழ்ச்சிகள் நடைபெற்றன. முன்னாள் மாணவர் காங்கிரஸ் மாநிலத் தலைவர் ராமநாதன் தலைமையிலும், மாணிக்கவேல், கே.டி. பிச்சமுத்து, ஏ.பி. ராஜவேல் ஆகியோரின் முன்னிலையிலும் நடைபெற்ற இந்நிகழ்வில், திருச்சி மலைக்கோட்டை உச்சிப்பிள்ளையார் கோவிலில் சிறப்புப் பிரார்த்தனை செய்யப்பட்டது.
அதனைத் தொடர்ந்து, முதியோர் இல்லத்தில் உள்ளவர்களுக்குக் காலை மற்றும் மதிய உணவு வழங்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளராக தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் மாநில பொதுசெயலாளர் வழக்கறிஞர் எம். சரவணன் கலந்துகொண்டு, பொதுமக்களுக்கு அன்னதானம் மற்றும் இனிப்புகளை வழங்கி சிறப்பித்தார். இதில் மாநிலப் பேச்சாளர் சிவாஜி சண்முகம், அண்ணா சிலை விக்டர், அப்துல் குத்தூஸ், மலைக்கோட்டை கோட்டம் பசங்க பிரதாபன், மார்க்கெட் மாரியப்பன், நிர்மல் குமார், இ.பி. ரோடு சண்முகம், கோகுல் குமார், பாலு, மலைக்கோட்டை சொக்கலிங்கம், பாலமுருகன், உறையூர் வி.ஜி. சேகர் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.