பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் பிறந்தநாளை முன்னிட்டு திருச்சியில் இலவச கண் மற்றும் பொது மருத்துவ முகாம்!

MsdMsd
Oct 8, 2026 - 21:03
Oct 8, 2026 - 21:04
பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் பிறந்தநாளை முன்னிட்டு திருச்சியில் இலவச கண் மற்றும் பொது மருத்துவ முகாம்!

பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவர் அன்புமணி ராமதாஸ் பிறந்தநாளை முன்னிட்டு, திருச்சி ரத்னா குளோபல் மருத்துவமனை, மேக்சிவிஷன் கண் மருத்துவமனை மற்றும் திருச்சி தெற்கு மாவட்ட பாட்டாளி மக்கள் கட்சி சார்பில் மாபெரும் இலவச கண் மற்றும் பொது மருத்துவ முகாம் தாராநல்லூர் சுப்புராயர் கோவில் திருமண மண்டபத்தில் இன்று நடைபெற்றது. இந்த மருத்துவ முகாமிற்கு பாட்டாளி மக்கள் கட்சியின் திருச்சி தெற்கு மாவட்ட செயலாளர் பி.கே. திலீப்குமார் தலைமை வகித்தார். முன்னாள் மாவட்ட செயலாளர் முசிறி பெ. மனோகரன் முன்னிலை வகித்தார். 

முகாமில் முதியோருக்கான கண் குறைபாடுகள், கண்புரை, குழந்தைகளின் கண் குறைபாடுகள் மற்றும் கண் நீர் அழுத்தம் உள்ளிட்ட பல்வேறு கண் தொடர்பான பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டன. மேலும், பொதுமக்களுக்கு சர்க்கரை அளவு, ரத்த அழுத்தம், உடல் எடை, மூச்சுத் திறன் உள்ளிட்ட பரிசோதனைகளுடன் பொது உடல்நலப் பரிசோதனையும் மேற்கொள்ளப்பட்டது. குடும்பத்தினருக்கான பல் பரிசோதனையும் நடைபெற்றது.

மருத்துவப் பரிசோதனைகளுக்குப் பின்னர் தேவையானவர்களுக்கு மருந்து, மாத்திரைகள் இலவசமாக வழங்கப்பட்டன. முகாமில் பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டு பயனடைந்தனர். மேலும் இம்மாதம் முழுவதும் இந்த முகாம் நடைபெறும். இதில் பொதுமக்கள் கலந்து கொண்டு பயனடைய வேண்டுமென மாவட்ட செயலாளர் திலீப் குமார் வேண்டுகோள் விடுத்துள்ளார்.