திருச்சி மாநகர் மாவட்ட காங்கிரஸ் கமிட்டி புதிய நிர்வாகிகள் அறிமுகம்!

MsdMsd
Nov 11, 2026 - 22:13
திருச்சி மாநகர் மாவட்ட காங்கிரஸ் கமிட்டி புதிய நிர்வாகிகள் அறிமுகம்!

திருச்சி மாநகர் மாவட்ட காங்கிரஸ் கமிட்டி சார்பில், புதிய நிர்வாகிகளுக்கான சான்றிதழ்கள் வழங்கும் நிகழ்ச்சி மற்றும் அறிமுக கூட்டம், மாவட்ட அலுவலகமான அருணாச்சலம் மன்றத்தில் இன்று நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு மாநகர் மாவட்ட காங்கிரஸ் கமிட்டித் தலைவரும், மாமன்ற உறுப்பினருமான ரெக்ஸ் தலைமை வகித்தார். மாவட்டப் பொறுப்பாளர் திரவியம் முன்னிலை வகித்தார்.

இதில், மாவட்ட நிர்வாகிகள், பகுதி தலைவர்கள் மற்றும் மண்டல ஒருங்கிணைப்பாளர்கள் உள்ளிட்ட பல்வேறு பொறுப்புகளுக்கு நியமிக்கப்பட்டவர்கள் அறிமுகப்படுத்தப்பட்டு சான்றிதழ்கள் வழங்கப்பட்டன. நிகழ்ச்சியில், காங்கிரஸ் கட்சியின் சிறுபான்மைப் பிரிவு மாநிலப் பொதுச் செயலாளர் பேட்ரிக் ராஜ்குமார், மாமன்ற உறுப்பினர் சோபியா விமலாராணி, மாநிலப் பொதுக்குழு உறுப்பினர் கீர்த்தனா உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் திரளாக கலந்து கொண்டனர்.