திருச்சி வயலூர் முருகன் கோவிலில், புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி சுவாமி தரிசனம்!
புதுச்சேரி முதலமைச்சர் ரங்கசாமி, திருச்சி வயலூர் முருகன் கோவிலில் சுவாமி தரிசனம் செய்வதற்காக புதுச்சேரியில் இருந்து சாலை மார்க்கமாக இன்று திருச்சி வந்தடைந்தார். தொடர்ந்து முருகனின் ஏழாம் படை வீடான வயலூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலுக்கு வருகை தந்த முதல்வர் ரங்கசாமிக்கு, கோவில் நிர்வாகம் சார்பில் மரியாதை செய்யப்பட்டது. தொடர்ந்து கோவிலை சுற்றி வந்து வழிபட்ட பின், சுவாமி முருகனுக்கு சிறப்பு பூஜை செய்யப்பட்டு பிரசாதம் வழங்கப்பட்டது. பின்னர் அங்கிருந்து புதுச்சேரிக்கு கார் மூலம் புறப்பட்டு சென்றார்.