திருச்சி ஃப்ரண்ட்லைன் மருத்துவமனையில் மாபெரும் இலவச மருத்துவ முகாம் – உயர் சிறப்பு மருத்துவர்கள் பங்கேற்று பொதுமக்களுக்கு சிகிச்சை, ஆலோசனைகள் வழங்கினர்!
திருச்சி சத்திரம் பேருந்து நிலையம், அண்ணா சிலை அருகே அமைந்துள்ள ஃப்ரண்ட்லைன் மருத்துவமனையில், உயர் சிறப்பு மருத்துவர்கள் பங்கேற்ற மாபெரும் இலவச மருத்துவ முகாம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இதில் சிறுநீரக அறுவை சிகிச்சை சிறப்பு மருத்துவர் பேராசிரியர் ஜெயபிரகாஷ் நாராயணன் உள்ளிட்ட பல்வேறு துறைகளைச் சேர்ந்த உயர் சிறப்பு மருத்துவர்கள் பங்கேற்று, பொதுமக்களுக்கு இலவச சிகிச்சை மற்றும் மருத்துவ ஆலோசனைகளை வழங்கினர்.
இந்த முகாமில் இதயவியல், நுரையீரல், இரைப்பை மற்றும் குடல் மருத்துவம், மகப்பேறு, கல்லீரல், கணையம், கண் மருத்துவம், நரம்பியல், மூளை மற்றும் தண்டுவட மருத்துவம், எலும்பு மற்றும் மூட்டு மருத்துவம், காது, மூக்கு, தொண்டை, இரத்த நாளவியல், மனநலம், சிறுநீரகவியல் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் மருத்துவ ஆலோசனைகள் வழங்கப்பட்டன.
மேலும், முகாமில் பங்கேற்ற பொதுமக்களுக்கு எக்கோ, இ.சி.ஜி., ஸ்கேன், யூரோஃப்ளோமெட்ரி, ரத்தப் பரிசோதனை, சர்க்கரை நோய்ப் பரிசோதனை மற்றும் எலும்பின் அடர்த்தியை அளவிடும் பி.எம்.டி. பரிசோதனை உள்ளிட்ட பல்வேறு பரிசோதனைகள் முற்றிலும் இலவசமாகச் செய்யப்பட்டன.
ஆயிரக்கணக்கான ரூபாய் மதிப்பிலான பரிசோதனைகள் இலவசமாக வழங்கப்பட்டதால் பொதுமக்கள் பயனடைந்தனர். முகாமில் நோய் பாதிப்பு கண்டறியப்பட்டவர்களுக்கு முதலமைச்சரின் விரிவான மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் சிகிச்சை அளிக்கவும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
இதுகுறித்து ஃப்ரண்ட்லைன் மருத்துவமனையின் சிறுநீரக அறுவை சிகிச்சை சிறப்பு மருத்துவர் ஜெயபிரகாஷ் நாராயணன் கூறியதாவது:-
அனைத்துத் துறைகளையும் சேர்ந்த உயர் சிறப்பு மருத்துவர்களைக் கொண்டு மாபெரும் இலவச மருத்துவ முகாம் நடத்தத் திட்டமிட்டு, இன்று முதல் முகாம் தொடங்கப்பட்டுள்ளது. இந்த முகாம் சிறப்பாக நடைபெற்று வருகிறது. பொதுவாக மருத்துவ முகாம்களில் எம்.பி.பி.எஸ். பட்டம் பெற்ற மருத்துவர்கள் பங்கேற்று சிகிச்சை மற்றும் ஆலோசனைகளை வழங்குவது வழக்கம். ஆனால், எங்கள் மருத்துவமனையில் முன்பதிவு செய்து ஆலோசனை பெறக்கூடிய உயர் சிறப்பு மருத்துவர்களே நேரடியாகப் பங்கேற்று, பொதுமக்களுக்குச் சிகிச்சை மற்றும் ஆலோசனைகளை வழங்க வேண்டும் என்ற நோக்கத்தில் இந்த முகாம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இம்முகாமில் பேராசிரியர் நிலையில் உள்ள பல்வேறு துறைகளைச் சேர்ந்த உயர் சிறப்பு மருத்துவர்கள் பங்கேற்றுள்ளனர். பொதுமக்களுக்கு ஆரம்ப நிலையிலேயே நோய்களைக் கண்டறிந்து, உரிய மருத்துவ ஆலோசனைகளை வழங்க வேண்டும் என்பதே இந்த முகாமின் முக்கிய நோக்கமாகும். இதயவியல், நுரையீரல், மூளை, தண்டுவடம், எலும்பு, மூட்டு, இரைப்பை, கல்லீரல், கணையம், குடல், மலவாய், இரத்த நாளவியல், மகப்பேறு, கண், காது, மூக்கு, தொண்டை, மனநலம், பொது மருத்துவம் உள்ளிட்ட பல்வேறு துறைகளைச் சேர்ந்த உயர் சிறப்பு மருத்துவர்கள் பங்கேற்று ஆலோசனைகளை வழங்கினர்.
மேலும், எக்கோ, இ.சி.ஜி., ஸ்கேன், யூரோஃப்ளோமெட்ரி, ரத்தப் பரிசோதனை, சர்க்கரை நோய்ப் பரிசோதனை மற்றும் எலும்பின் அடர்த்தியை அளவிடும் பரிசோதனை உள்ளிட்ட பல்வேறு பரிசோதனைகள் இலவசமாக மேற்கொள்ளப்பட்டன. நோய் பாதிப்பு கண்டறியப்பட்டவர்களுக்கு முதலமைச்சரின் விரிவான மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் சிகிச்சை வழங்கவும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன என தெரிவித்தார்.