மத்திய பிரதேச படகு விபத்தில் திருச்சியை சேர்ந்தவர்கள் பலி!
மத்தியப் பிரதேச மாநிலம் ஜபல்பூர் மாவட்டத்துக்குட்பட்ட பகுதியில் பர்கி அணை அமைந்துள்ளது. நர்மதா ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ள இந்த அணை பகுதியில் நேற்று மாலை 29 சுற்றுலா பயணிகளை ஏற்றிக் கொண்டு சென்ற படகு ஒன்று, சூறாவளி காற்றின் காரணமாக கவிழ்ந்து விபத்துக்கு உள்ளானது. இதில் படகில் சவாரி செய்த 9 பேர் பலியாகி உள்ளனர். மீதம் உள்ளவர்களை தேடும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. இந்த விபத்தில் மத்திய பிரதேச மாநிலம் ஓ.எஃப்.கே கமெரியா தொழிற்சாலையில் பணிபுரியும், திருச்சி மாவட்டம் நவல்பட்டு அண்ணா நகர் பகுதியை சேர்ந்த காமராஜ் மற்றும் அவரது மனைவி, மகன் ஆகிய மூவரும் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு பொதுமக்கள் அரசியல் கட்சியினர் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து வருகின்றனர்.