எத்தனை முனை போட்டிகள் இருந்தாலும் திமுகதான் முதல் முனையாக இருந்து வெற்றி பெறும் - வாக்களித்த பின் காதர் மைதீன் பேட்டி!

MsdMsd
Apr 23, 2026 - 21:17
Apr 25, 2026 - 21:17
எத்தனை முனை போட்டிகள் இருந்தாலும் திமுகதான் முதல் முனையாக இருந்து வெற்றி பெறும் - வாக்களித்த பின் காதர் மைதீன் பேட்டி!

திருச்சி மேற்கு தொகுதிக்கு உட்பட்ட காஜாமியான் மேல்நிலைப் பள்ளி வாக்குச்சாவடியில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியின் தேசிய தலைவர் காதர் மொய்தீன் வாக்களித்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர்,

 திமுக அரசு ஏராளமான நலத்திட்டங்களை செய்துள்ளது காலை உணவு திட்டம் எல்லாம் உலகில் பல நாடுகள் பின்பற்றக்கூடிய அளவிற்கு உள்ளது. இந்த தொகுதியில் திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி தான் வெற்றி பெறும். எத்தனை முனை போட்டிகள் இருந்தாலும் அதில் முதல் முனையாக திமுக தான் இருக்கிறது. 234 தொகுதிகளிலும் திமுக கூட்டணி தான் வெற்றி பெறும் என்றார்.