பேருந்தில் கல்லூரி மாணவியை தாக்கிய திருநங்கை - போலீசார் விசாரணை!

MsdMsd
Jun 30, 2026 - 15:10
Jul 1, 2026 - 15:10
பேருந்தில் கல்லூரி மாணவியை தாக்கிய திருநங்கை - போலீசார் விசாரணை!

திருச்சி மாவட்டம், துறையூரைச் சேர்ந்தவர் ரஹீமா (20). இவர் திருச்சி விஸ்வநாதன் அரசு மருத்துவக் கல்லூரியில் கிரிட்டிக்கல் கேர் மூன்றாம் ஆண்டு பயின்று வருகிறார். தினமும் தனது ஊரான துறையூரிலிருந்து திருச்சிக்கு பேருந்து மூலம் சென்று கல்வி பயின்று வருகிறார்.

இந்நிலையில் கடந்த 27-ம் தேதி கல்லூரியை முடித்துவிட்டு, ரஹீமா மாலை நேரத்தில் திருச்சி சத்திரம் பேருந்து நிலையத்திலிருந்து துறையூர் செல்லும் தனியார் பேருந்தில் ஏறியுள்ளார். பேருந்து சென்று கொண்டிருந்தபோது, அங்கு வந்த திருநங்கை ஒருவர் ரஹீமாவிடம் யாசகம் கேட்டுள்ளார். அதற்கு ரஹீமா மறுப்பு தெரிவித்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த அந்த திருநங்கை, பேருந்திலேயே ரஹீமாவைச் சரமாரியாகத் தாக்கியுள்ளார்.

இந்தத் தாக்குதல் காட்சிகள் பேருந்தில் இருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது. இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வேகமாகப் பரவி வருகிறது. இந்தச் சம்பவம் குறித்து பாதிக்கப்பட்ட மாணவி ரஹீமா, திருச்சி கோட்டை காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் அடிப்படையில், சம்பந்தப்பட்ட திருநங்கை மீது ஆபாசமாகப் பேசுதல், தாக்குதல் நடத்துதல் உள்ளிட்ட 4 பிரிவுகளின் கீழ் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து, தலைமறைவாக உள்ள திருநங்கையை தேடி வருகின்றனர்.