திருச்சி ஸ்ரீரங்கம் அருள்மிகு ஸ்ரீ அரங்கநாத சுவாமி கோவிலில் ஆண்டுதோறும் பங்குனி தேர் திருவிழா வெகு விமர்சையாக கொண்டாடப்படுவது வழக்கம். அந்த வகையில் இந்த ஆண்டிற்கான பங்குனி தேர் திருவிழா இன்று கொடியேற்றத்துடன் தொடங்கியது. கோவில் பட்டர்கள், அர்ச்சகர்கள் சிறப்பு பூஜைக்கு பின் கொடியேற்றப்பட்டது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியான உறையூர் கமலவல்லி நாச்சியார் நம் பெருமாள் சேர்த்தி சேவை மார்ச்.29 அன்றும், நம்பெருமாள் ரெங்கநாயகி தாயார் சேர்த்தி சேவை ஏப்ரல்.1 அன்றும், கோரதம் எனப்படும் பங்குனி தேரோட்டம் வருகிற ஏப்ரல் 2ம் தேதியும் நடைபெறுகிறது. விழா ஏற்பாடுகளை இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள், கோவில் நிர்வாகத்தினர் செய்து வருகின்றனர்.