தே.ஜ.கூட்டணி திருச்சி மேற்கு தொகுதி தேர்தல் பணிமனை திறப்பு!
தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் திருச்சி மேற்கு தொகுதியில் போட்டியிடும், அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் வேட்பாளர் ராஜசேகரன், வேட்பு மனு தாக்கல் செய்து தொகுதி முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு, பொதுமக்களை சந்தித்து தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார். இந்நிலையில் தேசிய ஜனநாயக கூட்டணியின் திருச்சி மேற்கு தொகுதி தேர்தல் பணிமனை அலுவலகம் திறப்பு விழா தில்லைநகர் பகுதியில் இன்று நடைபெற்றது.
இதில் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் தெற்கு மாவட்ட செயலாளர் செந்தில்நாதன், வேட்பாளர் ராஜசேகரன் மற்றும் கூட்டணி கட்சியினர் கலந்து கொண்டு, தேர்தல் பணிமனை அலுவலகத்தை திறந்து வைத்தனர். அதனை தொடர்ந்து எம்ஜிஆர் ஜெயலலிதா ஆகியோரின் உருவ படங்களுக்கு வேட்பாளர் ராஜசேகரன் மலர் தூவி மரியாதை செலுத்தினார்.
பின்னர் கூட்டணி கட்சியினருடன் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் தேர்தல் பணிகள் குறித்து ஆலோசனைகள் வழங்கப்பட்டது. இக்கூட்டத்தில் தேசிய ஜனநாயக கூட்டணி கட்சிகளின் மாவட்ட தலைவர்கள், முக்கிய நிர்வாகிகள், உறுப்பினர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.