லால்குடி தெற்கு ஒன்றிய பகுதிகளில் லீமாரோஸ் மார்ட்டின் தீவிர வாக்கு சேகரிப்பு!

MsdMsd
Apr 11, 2026 - 15:03
Apr 13, 2026 - 15:04
லால்குடி தெற்கு ஒன்றிய பகுதிகளில் லீமாரோஸ் மார்ட்டின் தீவிர வாக்கு சேகரிப்பு!

தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் ஏப்ரல் 23ஆம் தேதி நடைபெற உள்ள நிலையில், தேர்தல் களம் சூடுபிடிக்க தொடங்கியுள்ளது. தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில், திருச்சி லால்குடி தொகுதியில் போட்டியிடும் வேட்பாளர் லீமா ரோஸ், கடும் வெயிலையும் பொருட்படுத்தாமல், தொகுதி முழுவதும் சூறாவளி சுற்றுப்பயணம் செய்து பொதுமக்களை சந்தித்து ஆதரவு திரட்டி வருகிறார்.

அந்த வகையில் இன்று (ஏப்.11) லால்குடி தெற்கு ஒன்றிய பகுதிகளான தாளக்குடி, அகிலாண்டபுரம், மேல் வாளாடி, புதுக்குடி, செம்பழனி, மழவராயர், தத்தனூர், சிறு மருதூர், கீழ வாளாடி, பச்சாம்பேட்டை, நெருஞ்சல்குடி, ஆங்கரை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக்கு நேரில் சென்ற வேட்பாளர் லீமா ரோஸ், அப்பகுதியில் பொதுமக்களை சந்தித்து அவர்களின் குறைகளை கேட்டறிந்து, தேசிய ஜனநாயக கூட்டணியின் தேர்தல் வாக்குறுதிகளை எடுத்து கூறி, இரட்டை இலை சின்னத்திற்கு வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.

அப்போது அப்பகுதி மக்கள் வேட்பாளர் லீமா ரோசுக்கு உற்சாக வரவேற்பளித்து தங்களது ஆதரவை தெரிவித்தனர். இந்த பிரச்சாரத்தின் போது தேசிய ஜனநாயக கூட்டணி கட்சிகளின் மாவட்ட தலைவர்கள், நிர்வாகிகள், தொண்டர்கள் திரளாக கலந்து கொண்டு, இரட்டை இலை சின்னத்திற்கு வாக்கு சேகரித்தனர்.