லால்குடி அதிமுக வேட்பாளர் லீமா ரோஸை ஆதரித்து ஐஜேகே தலைவர் ரவி பச்சமுத்து பரப்புரை!

MsdMsd
Apr 13, 2026 - 12:08
Apr 15, 2026 - 12:08
லால்குடி அதிமுக வேட்பாளர் லீமா ரோஸை ஆதரித்து ஐஜேகே தலைவர் ரவி பச்சமுத்து பரப்புரை!

தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் திருச்சி மாவட்டம் லால்குடி தொகுதியில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர் லீமா ரோஸை ஆதரித்து, இந்திய ஜனநாயக கட்சியின் தலைவர் ரவி பச்சமுத்து, லால்குடி ரவுண்டானா பகுதியில் இன்று (ஏப்.12) பிரச்சாரம் மேற்கொண்டார். அப்போது அவர் பேசுகையில்,...

இந்த லால்குடி தொகுதியில் கல்வி, மருத்துவம், குடிநீர், சாலை வசதி போன்ற அடிப்படை தேவைகளை திமுக நிர்வாகத்திடம் கேட்டும் பெற முடியாத நிலை உள்ளது. மக்களுடன் நெருக்கமாக பழகும், மக்களின் பிரச்சினைகளை புரிந்து கொண்டு செயல்படும் எம்.எல்.ஏக்கள் தான் இன்று தேவையாக உள்ளனர். மக்களின் தேவைகளை நேரடியாக எடுத்துச் சென்று நிறைவேற்ற முயற்சி செய்யும் தலைவர்களே நமக்கு தேவையானவர்கள். அந்த வகையில், மேடம் லீமா ரோஸ் மக்கள் சார்ந்த வேட்பாளர். எனவே இந்த வாய்ப்பைப் பயன்படுத்தி, இரட்டை இலை சின்னத்தில் வாக்களித்து, பெருவாரியான வாக்கு வித்தியாசத்தில் அவரை வெற்றி பெறச் செய்வது லால்குடி மக்களின் கடமையாகும் என பேசினார். 

இந்த பிரச்சாரத்தின் போது ஆயிரக்கணக்கான பொதுமக்கள் திரண்டு வேட்பாளர் லீமா ரோசுக்கு தங்களது ஆதரவை தெரிவித்தனர்.