சிபிஐ இயக்குனர் பதவி நீட்டிப்பை கண்டித்து, திருச்சி மாநகர் மாவட்ட காங்கிரஸ் கமிட்டியின் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்!

MsdMsd
May 16, 2026 - 06:54
சிபிஐ இயக்குனர் பதவி நீட்டிப்பை கண்டித்து, திருச்சி மாநகர் மாவட்ட காங்கிரஸ் கமிட்டியின் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்!

சிபிஐ இயக்குநர் பிரவீன் சூட்டின் பதவிக்காலத்தை நீட்டிப்பதற்காக நடைபெற்ற தேர்வுக் குழு கூட்டத்தில், முறையான முழுப் பட்டியலை வழங்காமல் பிரதமர் மோடியின் விருப்பத்திற்காக ஒருதலைப்பட்சமாக முடிவு எடுக்கப்பட்டுள்ளதை கண்டித்தும், நீட் தேர்வை ரத்து செய்து மாநில அரசுகளே தேர்வு நடத்த அனுமதிக்க மறுக்கும் மத்திய அரசை கண்டித்தும், தமிழகம் முழுவதும் இன்று கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என காங்கிரஸ் கட்சியின் மாநில தலைவர் செல்வ பெருந்தகை அறிவித்திருந்தார்.

அதன் அடிப்படையில் திருச்சி மாநகர் மாவட்ட காங்கிரஸ் கமிட்டியின் சார்பில், தெப்பக்குளம் பகுதியில் உள்ள மகாத்மா காந்தி சிலை அருகே இன்று கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் மாநகர் மாவட்ட தலைவர் ரெக்ஸ் கலந்துகொண்டு, ஆர்ப்பாட்டத்திற்கு தலைமை வகித்து கண்டன உரையாற்றினார். மாவட்ட பொருளாளர் முரளி முன்னிலை வகித்தார்.

மேலும் இந்த ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட நிர்வாகிகள் புல்லட் ராஜா, ஷேக்தாவுத், முன்னாள் ராணுவ பிரிவு ராஜசேகரன், ஆராய்ச்சி பிரிவு மாநில பொதுசெயலாளர் பாண்டியன், கோட்டத் தலைவர்கள் மலைக்கோட்டை வெங்கடேஷ் காந்தி, ஸ்ரீரங்கம் ஜெயம் கோபி, திருவானைக்கோவில் தர்மேஷ், மார்க்கெட் பகதூர்ஷா, ஜங்ஷன் பிரியங்கா பட்டேல், காட்டூர் ராஜா டேனியல் ராய், அரியமங்கலம் அழகர், ஏர்போர்ட் கனகராஜ், மணிவேல் அண்ணாதுரை, தில்லைநகர் ராகவேந்திரன், புத்தூர் மலர் வெங்கடேஷ், பொன்மலை பாலு, அணி தலைவர்கள் மகிலா காங்கிரஸ் அஞ்சு, ஷீலாசெளஸ், கலைப் பிரிவு அருள், சுப்புராஜ், மனித உரிமை பதிவு எஸ் ஆர் ஆறுமுகம், விவசாய பிரிவு அண்ணாதுரை, அமைப்புசாரா பிரிவு மகேந்திரன், தகவல் அறியும் உரிமை சட்டம் பிரபாகரன், ஊடகப்பிரிவு செந்தில்,மாணவர் காங்கிரஸ் நரேன், சிறும்பான்மை பிரிவு பஜார் மொய்தின், வார்டு நிர்வாகிகள் நிர்வாகிகள் மூர்த்தி, நித்தியானந்தம், சம்பத், சையத், தியாகி ராஜா, சுப்புராஜ், பத்மா, மும்தாஜ், விஜி, கண்ணன், சரவணன், ரவி சுந்தரம் உள்பட காங்கிரஸ் கட்சியின் அனைத்து அணி நிர்வாகிகள், உறுப்பினர்கள் திரளாக கலந்து கொண்டு மத்திய அரசை கண்டித்து கோஷங்களை எழுப்பினர்.