பாலியல் வன்கொடுமைகளுக்கு எதிராக திருச்சியில் எஸ்டிபிஐ மகளிர் அணி சார்பில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்!

MsdMsd
Jun 18, 2026 - 15:53
பாலியல் வன்கொடுமைகளுக்கு எதிராக திருச்சியில் எஸ்டிபிஐ மகளிர் அணி சார்பில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்!

தமிழகத்தில் தொடர்ந்து அதிகரித்து வரும் பாலியல் வன்கொடுமைகளைக் கண்டித்தும், பெண்களுக்கு எதிரான குற்றங்களைத் தடுக்க கடுமையான சட்டங்களை உடனடியாக அமல்படுத்த வலியுறுத்தியும், SDPI கட்சியின் திருச்சி தெற்கு மாவட்ட மகளிர் அணி சார்பாக மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம், திருச்சி மரக்கடை பகுதியில் இன்று நடைபெற்றது.

இந்த கண்டன ஆர்ப்பாட்டத்திற்கு மகளிர் அணி மாவட்ட தலைவர் தௌலத் நிசா தலைமை தாங்கினார். மகளிர் அணி மாவட்ட துணைத்தலைவர் பஷீரா கனி, SDPI கட்சியின் திருச்சி தெற்கு மாவட்ட தலைவர் தமீம் அன்சாரி ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்ட துணைத்தலைவர் மூமினா அனைவரையும் வரவேற்றுப் பேசினார்.

மேலும் இந்த ஆர்ப்பாட்டத்தில் சிறப்பு அழைப்பாளர்களாகமாநில செயலாளர் ஆலிமா மெஹராஜ் பானு மற்றும் வர்த்தக அணி மாநில பொது செயலாளர் கே.முபாரக் அலி ஆகியோர் கலந்து கொண்டு கண்டன உரையாற்றினர். அவர்கள் தங்களது உரையில், "தமிழகத்தில் பெண்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமைகளில் ஈடுபடுவோருக்கு அரசு மிகக் கடுமையான தண்டனைகளை வழங்க வேண்டும். பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்யத் தேவையான அனைத்து துரித நடவடிக்கைகளையும் தமிழக அரசு உடனே எடுக்க வேண்டும்" என வலியுறுத்தினர்.

மேலும் இந்த ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட பொது செயலாளர் பாத்திமா, SDPI மகளிர் அணி மேற்கு தொகுதி தலைவர் முபீனா, திருவெறும்பூர் தொகுதி தலைவர் ரம்ஜான், செயலாளர் பரக்கத் நிஷா, கிழக்கு தொகுதி தலைவர் சாஜாத்தி மற்றும் தொகுதி, கிளை நிர்வாகிகள், SDPI கட்சியின் மாவட்ட, தொகுதி, கிளைப் பொறுப்பாளர்கள் மற்றும் பொதுமக்கள் என ஏராளமானோர் கலந்துகொண்டு கோஷங்களை எழுப்பினர். இறுதியாக மாவட்ட ஐடி விங் தலைவர் S.A.செய்யது பீவி நன்றியுரை கூறினார்.