கூத்தைப்பார் சமுத்தி குளம் பாசன விவசாயிகள் சங்கம் சார்பில் காமராஜர் சிலைக்கு மரியாதை; குளத்தை மீட்க காமராஜர் பிறந்தநாளில் கோரிக்கை!

MsdMsd
Jul 15, 2026 - 16:05
Jul 15, 2026 - 16:19
கூத்தைப்பார் சமுத்தி குளம் பாசன விவசாயிகள் சங்கம் சார்பில் காமராஜர் சிலைக்கு மரியாதை; குளத்தை மீட்க  காமராஜர் பிறந்தநாளில் கோரிக்கை!

தமிழ்நாடு முன்னாள் முதலமைச்சர் பெருந்தலைவர் காமராஜரின் 124-வது பிறந்தநாளை முன்னிட்டு, திருச்சி மத்திய பேருந்து நிலையம் அருகே உள்ள அவரது சிலைக்கு, கூத்தைப்பார் சமுத்தி குளம் பாசன விவசாயிகள் சங்கம் சார்பில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. சங்கத்தின் தலைவர் சங்கிலி முத்து தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில், செயலாளர் எம்.ஆறுமுகசாமி, பொருளாளர் பி.ஆறுமுகசாமி உள்ளிட்ட விவசாயிகள் திரளாகப் பங்கேற்று, காமராஜரின் திருவுருவச் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

தமிழகத்தின் விவசாய வளர்ச்சிக்காகப் பல அணைகளையும் ஏரிகளையும் உருவாக்கி, விவசாயிகளின் வாழ்வாதாரத்தை உயர்த்தியவர் காமராஜர். அத்தகைய தியாகத் தலைவரின் பிறந்தநாளில், தங்களது நீண்டநாள் கோரிக்கையை விவசாயிகள் மீண்டும் முன்வைத்துள்ளனர்.

இது குறித்துப் பேசிய விவசாயிகள் சங்கத்தினர்,

கூத்தைப்பார் கிராமத்தில் உள்ள சமுத்தி குளம் ஆக்கிரமிப்புகளை அகற்றி, அதனைத் தூர்வாரித் தர வேண்டும் என்று ஏற்கனவே திருவெறும்பூர் வட்டாட்சியரிடம் மனு அளித்துள்ளோம். அதன் அடிப்படையில், சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர். விவசாயப் பணிகளுக்குத் தடையின்றி நீர் கிடைக்க, சமுத்தி குளத்தைச் சீரமைக்க வேண்டியது மிக அவசியமானது. எனவே, காலதாமதத்தைத் தவிர்த்து, விரைந்து குளத்தைச் சீரமைத்துத் தருமாறு தமிழ்நாட்டில் நல்லாட்சி வழங்கி வரும் முதலமைச்சர் ஜோசப் விஜய்க்கு காமராஜர் பிறந்தநாளில் தாங்கள் கோரிக்கை விடுப்பதாக விவசாயிகள் தெரிவித்தனர்.