டெல்லி போராட்டத்தில் மாணவர்கள் மீது அடக்குமுறைகளை கையாண்ட மத்திய அரசை கண்டித்து, திருச்சியில் எஸ்டிபிஐ கட்சியினர் கண்டன ஆர்ப்பாட்டம்!

MsdMsd
Jul 25, 2026 - 21:47
டெல்லி போராட்டத்தில் மாணவர்கள் மீது அடக்குமுறைகளை கையாண்ட மத்திய அரசை கண்டித்து, திருச்சியில் எஸ்டிபிஐ கட்சியினர் கண்டன ஆர்ப்பாட்டம்!

நீட் தேர்வு முறைகேடுகளை கண்டித்து டெல்லியில் அறவழியில் போராடிய மாணவர்கள் இளைஞர்கள் மீது அடக்கு முறையை ஏவி வரும் மத்திய அரசை கண்டித்து எஸ்டிபிஐ கட்சியின் திருச்சி தெற்கு மாவட்டம் சார்பில் பாலக்கரை ரவுண்டானா பகுதியில் இன்று கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட துணை தலைவர் தளபதி அப்பாஸ் தலைமை வகித்தார். வர்த்தக அணி மாநில பொதுச்செயலாளர் முபாரக் அலி, மாவட்ட பொதுச்செயலாளர் முகமது சித்திக், மாவட்ட துணைத் தலைவர் ரஹீம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இந்த ஆர்ப்பாட்டத்தில் சிறப்பு அழைப்பாளராக எஸ்டிபிஐ கட்சியின் மாநில பொதுச் செயலாளர் அபூபக்கர் சித்திக் கலந்துகொண்டு கண்டன உரையாற்றினார். 

மேலும் இந்த ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட செயலாளர் மதர் ஜமால் முகமது, யங் டெமாக்ரேட்ஸ் மாநில ஒருங்கிணைப்பு குழு உறுப்பினர் மணப்பாறை ரபீக், வர்த்தக அணி மாவட்ட தலைவர் பக்ருதீன், மகளிர் அணி மாவட்ட தலைவர் தௌலத் நிஷா, திருவெறும்பூர் தொகுதி தலைவர் ஷேக், எஸ்டிடியூ மாவட்ட செயலாளர் முகமது வாஷிக், மாவட்ட செயலாளர் சதாம் உசேன், மாவட்ட பொருளாளர் பிச்சைக்கனி, மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் ஏர்போர்ட்.மஜீத், K.முஹம்மது சலீம், SDTU மாவட்ட தலைவர் சக்கரை மீரான், வர்த்தக அணி மாநில செயற்குழு உறுப்பினர்கள் அலாவுதீன், சாதிக் பாஷா, மகளிர் அணி மாவட்ட பொதுச் செயலாளர் ஜே.பாத்திமா, சுற்று சூழல் அணி மாவட்ட தலைவர் ஹக்கீம், IT wing திருச்சி மண்டல செயலாளர் KSA ரியாஸ், IT wing மாவட்ட தலைவர் உபைதூர் ரஹ்மான், கிழக்கு தொகுதி தலைவர் சபியுல்லா மற்றும் நிர்வாகிகள், உறுப்பினர்கள் திரளாக கலந்து கொண்டு மத்திய அரசுக்கு எதிராக கோஷங்களை எழுப்பினர். இறுதியாக மேற்கு தொகுதி தலைவர் சையது முஸ்தபா நன்றியுரை வழங்கினார்.