திருச்சி தூய வளனார் கல்லூரியில், ஏவுகணை நாயகன் அப்துல் கலாம் நினைவு நாள் அனுசரிப்பு!

MsdMsd
Jul 27, 2026 - 14:29
Jul 28, 2026 - 14:29
திருச்சி தூய வளனார் கல்லூரியில், ஏவுகணை நாயகன் அப்துல் கலாம் நினைவு நாள் அனுசரிப்பு!

இந்தியாவின் முன்னாள் ஜனாதிபதியும் ஏவுகணை நாயகன் என்று போற்றப்படுபவருமான டாக்டர் ஏ.பி.ஜே. அப்துல் கலாமின் நினைவு நாள் இன்று நாடு முழுவதும் அனுசரிக்கப்பட்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக, அவர் பயின்ற திருச்சிராப்பள்ளி புனித வளனார் கல்லூரியில் சிறப்பு நினைவு தின நிகழ்ச்சி மிகச் சிறப்பாகக் கொண்டாடப்பட்டது.

கடந்த 1954ஆம் ஆண்டு திருச்சியில் உள்ள புனித வளனார் கல்லூரியில் பயின்று, இக்கல்லூரிக்கு மாபெரும் பெருமை சேர்த்தவர் டாக்டர் ஏ.பி.ஜே. அப்துல் கலாம். இதன் காரணமாக, ஒவ்வொரு ஆண்டும் அவரது நினைவு நாள் இக்கல்லூரியில் மிகுந்த மரியாதையுடனும், சிறப்பான முறையிலும் அனுசரிக்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

இன்றைய நினைவு நாளையொட்டி, கல்லூரியில் உள்ளரங்கில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு கல்லூரி அதிபர் பவுல்ராஜ் மைக்கேல் தலைமை தாங்கினார். இந்நிகழ்ச்சியில் திருச்சிராப்பள்ளி மண்டலக் கல்லூரிக்கல்வி இணை இயக்குநர் முனைவர் ராதாகிருஷ்ணன் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டு சிறப்புரையாற்றினார். அப்பொழுது அவர் பேசுகையில்:-- மறைந்த முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாம் அவர்களின் மனிதநேயம், அசாத்திய அறிவியல் ஞானம், மாணவர்களை ஊக்கப்படுத்தும் உன்னத குணம் மற்றும் தொலைநோக்குச் சிந்தனைகள் இளைய சமுதாயத்திற்கு எப்போதும் வழிகாட்டியாக அமையும் என்று பெருமிதத்துடன் எடுத்துரைத்தார்.

இந்த உணர்வுபூர்வமான நிகழ்வில், கல்லூரியின் செயலர் ஆரோக்கியசாமி சேவியர், கல்லூரி முதல்வர் ஆரோக்கியம், இணை முதல்வர் குமார், இயற்பியல் துறை தலைவர் ஜான்சன் மற்றும் பேராசிரியர்கள், மாணவ, மாணவியரும் திரளாகக் கலந்துகொண்டு இந்தியாவின் மாமனிதருக்குத் தங்கள் மலரஞ்சலியைச் செலுத்தினார்கள்.