திருச்சி பிரைனோ பிரைன் சார்பில் 179 வது மண்டல அளவிலான அபாகஸ் போட்டி - மாணவ, மாணவிகள் ஆர்வமுடன் பங்கேற்பு!

MsdMsd
Aug 2, 2026 - 13:27
திருச்சி பிரைனோ பிரைன் சார்பில் 179 வது மண்டல அளவிலான அபாகஸ் போட்டி - மாணவ, மாணவிகள் ஆர்வமுடன் பங்கேற்பு!

திருச்சி பிரைனோ பிரைன் சார்பில் ஆண்டுதோறும் அபாகஸ் மனக்கணித போட்டி நடத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில் 179வது மண்டல அளவிலான அபாகஸ் போட்டி, திருச்சி பஞ்சப்பூர் பகுதியில் உள்ள தனியார் அரங்கில் இன்று நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினராக பிரைனோ பிரைன் இன்டர்நேஷனல் தொழில்நுட்ப இயக்குனர் அருள் சுப்பிரமணியம் கலந்து கொண்டார்.

மண்டல பொறுப்பாளர் ப்ரியா சிவலிங்கம் முன்னிலை வகித்தார். இதில் திருச்சி உள்ளிட்ட 11 மாவட்டங்களை சேர்ந்த 4 முதல் 14 வயது மாணவ, மாணவிகள் ஆர்வமுடன் கலந்து கொண்டனர். வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பாராட்டு சான்றிதழ் மற்றும் பதக்கம் உள்ளிட்ட பரிசுகள் வழங்கப்பட்டது.