திருச்சி கிழக்கு தொகுதிக்கு உட்பட்ட அருவி முதியோர் இல்லத்தில், ஆர்.கே.ராஜா தலைமையில் தீபாவளி பண்டிகை சிறப்பு கொண்டாட்டம்!

MsdMsd
Nov 8, 2026 - 07:54
திருச்சி கிழக்கு தொகுதிக்கு உட்பட்ட அருவி முதியோர் இல்லத்தில், ஆர்.கே.ராஜா தலைமையில் தீபாவளி பண்டிகை சிறப்பு கொண்டாட்டம்!

தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர், தமிழக முதலமைச்சர் ஜோசப் விஜய் நல்வாழ்த்துகளுடனும், தவெக பொதுச்செயலாளரும், தமிழக ஊரக வளர்ச்சி மற்றும் நீர்வளத்துறை அமைச்சருமான என். ஆனந்த் வழிகாட்டுதலின்படியும், திருச்சி கிழக்கு சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட அருவி முதியோர் இல்லத்தில் தீபாவளி பண்டிகை சிறப்பாக நடைபெற்றது.

தமிழக வெற்றிக் கழகத்தின் மூத்த நிர்வாகியும், விஜய் மக்கள் இயக்கத்தின் முன்னாள் மாவட்டத் தலைவருமான ஆர்.கே. ராஜா தலைமையில் நடைபெற்ற இவ்விழாவில், முதியோர் இல்லத்தில் தங்கியுள்ள முதியோர்களுக்கு புத்தாடைகள் மற்றும் இனிப்புகள் வழங்கப்பட்டு, பட்டாசுகள் வெடித்து தீபாவளிப் பண்டிகை கோலாகலமாகக் கொண்டாடப்பட்டது. இந்நிகழ்வில் தமிழக வெற்றிக் கழக நிர்வாகிகள் மணப்பாறை Er. P. நடேஷ்குமார், தொட்டியம் பாரதிராஜா, உறையூர் சரண்ராஜ், சமயபுரம் சதீஷ்குமார், லால்குடி எஸ்.எஸ்.பி. விஜய், சமயபுரம் சாரதி, அரியமங்கலம் ஆசிப், உறையூர் மூர்த்தி, ஹரிஹரன், கோகுல் உள்ளிட்ட பலர் திரளாகக் கலந்து கொண்டு, முதியோர்களுடன் தீபாவளி பண்டிகையை சிறப்பாக கொண்டாடினர்.