திருச்சி உறையூர் வடக்கு பகுதி அதிமுக சார்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா - மாநகர் மாவட்ட செயலாளர் கார்த்திகேயன் பங்கேற்பு!
திருச்சி மாநகர் மாவட்டம், திருச்சி மேற்கு சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட உறையூர் வடக்கு பகுதி அதிமுக சார்பில், உறையூர் நவாப் தோட்டம் பகுதியில் 5 இடங்களில் கழகக் கொடியேற்று விழா மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா கோலாகலமாக நடைபெற்றது.
உறையூர் வடக்கு பகுதி செயலாளர் உறந்தை முத்தையா தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் மாவட்ட வழக்கறிஞர் அணி இணைச் செயலாளர் மலர்விழி மற்றும் வட்ட செயலாளர்கள் சிவசுப்பிரமணியன், சுப்ரா, வெஸ்லி, ஜெயபால், சதீஷ்குமார், பாபர் அலி ஆகியோர் வரவேற்புரை வழங்கினர்.
மாவட்ட மகளிரணி செயலாளரும், செயற்குழு உறுப்பினருமான வனிதா முன்னிலை வகித்தார். இதில் ஜெயலலிதா பேரவை மாநில துணைச் செயலாளர் மற்றும் கவுன்சிலர் அரவிந்தன், டி.ஆர்.சுரேஷ் குமார், மாவட்ட துணை செயலாளர் வெல்லமண்டி சண்முகம், பொருளாளர் மார்க்கெட் தங்கராஜ் ஆகியோர் சிறப்பு அழைப்பாளர்களாகக் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.
நிகழ்ச்சியின் முக்கிய நிகழ்வாக, மாநகர் மாவட்ட செயலாளரும், ஆவின் முன்னாள் தலைவருமான இன்ஜினியர் கார்த்திகேயன் பல்வேறு இடங்களில் அதிமுக கொடியை ஏற்றி வைத்து பொதுமக்களுக்கு இனிப்புகளை வழங்கினார். இதனைத் தொடர்ந்து, மாவட்ட செயலாளர் கார்த்திகேயன் மற்றும் அமைப்பு செயலாளர் டி. ரத்தினவேல் ஆகியோர் பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கியதுடன், பல்வேறு நலத்திட்ட உதவிகளையும் நேரில் வழங்கி சிறப்பித்தனர்.
இந்நிகழ்ச்சியில் தென்னூர் அப்பாகுட்டி, பாலசுப்பிரமணி, கலை பிரிவு தினேஷ், பாலமோகன்ராஜ், வரகனேரி ராஜேந்திரன், பாலாஜி, ஜான் எட்வர்ட், திருநாவுக்கரசு, பி.எம்.குமார், சுரேஷ்குப்தா, சுதாகர், இலியாஸ், ராஜ்மோகன், சிந்தாமணி மகாதேவன், கிராப்பட்டி கமலஹாசன், வசந்தம் செல்வமணி, கல்லுக்குழி சுந்தர் சிங், முத்துக்குமார், செல்லப்பா, மோகன், எடத்தெரு பாபு, இன்ஜினியர் ரமேஷ், ஜோசப் செபா, ஜெயகுமார், ராஜாளி சேகர், புத்தூர் பாலு, ஈஸ்வரன், பொம்மாச்சி பாலமுத்து, ரபீக், ஜெயராஜ், அரவானூர் பன்னீர்செல்வம், ஒத்தக்கடை மகேந்திரன், வண்ணாரப்பேட்டை ராஜன், இளநீர் ராஜேந்திரன், உறையூர் சந்திரசேகர், ஜெயந்தி சிவா, வெள்ளமண்டி கன்னியப்பன், ரமணி லால் உள்ளிட்ட ஏராளமான கழக நிர்வாகிகளும் தொண்டர்களும் பொதுமக்களும் திரளாகக் கலந்து கொண்டனர்.