திருச்சி சத்திரம் பேருந்து நிலையம் பகுதியில் "வெற்றிவேல் ஜவுளி ஸ்டோர்" திறப்பு விழா!

MsdMsd
Sep 14, 2026 - 21:38
திருச்சி சத்திரம் பேருந்து நிலையம் பகுதியில் "வெற்றிவேல் ஜவுளி ஸ்டோர்" திறப்பு விழா!

திருச்சி சத்திரம் பேருந்து நிலையம் அருகே உள்ள சித்ரா காம்ப்ளக்ஸில், ரகுநாத் ஹோட்டல் அருகில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள ‘வெற்றிவேல் ஜவுளி ஸ்டோர்’ திறப்பு விழா நேற்று (செப்.13) ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. புதிய கடையின் திறப்பு விழாவில் திருச்சி கோட்டை காவல் நிலைய ஆய்வாளர் பிரேம் ஆனந்த் சிறப்பு விருந்தினராக பங்கேற்று, ரிப்பன் வெட்டி கடையை திறந்து வைத்தார்.

இந்த நிகழ்ச்சியில் கடையின் உரிமையாளர் எம். ராம்குமார் மற்றும் எஸ். குணசேகர், கே. சண்முகம், வி. சண்முகம், முத்துக்குமார், நவீன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். திறப்பு விழாவைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய கடையின் உரிமையாளர் ராம்குமார், சத்திரம் பேருந்து நிலையம் திருச்சி மட்டுமின்றி அரியலூர், பெரம்பலூர், கரூர், சமயபுரம் உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்த பொதுமக்களும் அதிகளவில் வந்து செல்லும் முக்கியமான பகுதியாக இருப்பதாக தெரிவித்தார். பேருந்து நிலையத்திற்கு வரும் பொதுமக்கள் எளிதில் அணுகும் வகையில் அமைந்துள்ள தங்களது கடையில், ஆண்கள், பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கான பல்வேறு வகையான ரெடிமேட் ஆடைகள் மற்றும் ஜவுளி ரகங்கள் கிடைக்கும் எனக் கூறினார். மேலும், தரமான ஆடைகளை மலிவான விலையில் வழங்குவதுடன், வாடிக்கையாளர்களின் நம்பிக்கைக்கும் திருப்திக்கும் முக்கியத்துவம் அளித்து விற்பனை செய்து வருவதாக தெரிவித்த அவர், பொதுமக்கள் அனைவரும் கடைக்கு வருகை தந்து தங்களுக்கு தேவையான ஜவுளி மற்றும் ரெடிமேட் ஆடைகளை வாங்கிச் செல்லுமாறு அழைப்பு விடுத்தார்.