ஹைபிரிட் தொழில்நுட்பத்துடன் கியா சொரென்டோ அறிமுகம் – திருச்சியில் களைகட்டிய புதிய கார் அறிமுக விழா!

MsdMsd
Sep 17, 2026 - 11:57
Sep 17, 2026 - 12:01
ஹைபிரிட் தொழில்நுட்பத்துடன் கியா சொரென்டோ அறிமுகம் – திருச்சியில் களைகட்டிய புதிய கார் அறிமுக விழா!

திருச்சியில் புதிய கியா சொரென்டோ கார் அறிமுகம்; ஒரே நாளில் 10 புக்கிங் - டெஸ்ட் டிரைவ் செய்ய வாடிக்கையாளர்களுக்கு அழைப்பு.

திருச்சி கருமண்டபம் பகுதியில் அமைந்துள்ள ரமணி கியா ஷோரூமில், கியா நிறுவனத்தின் புதிய தலைமுறை சொரென்டோ (Sorento) மாடல் கார்களின் அறிமுக விழா இன்று நடைபெற்றது. விழாவில் காவல்துறை துணை ஆணையர் கபிலன் (ஓய்வு), தைலா ஏஜென்சீஸ் நிறுவன உரிமையாளர் பிரபு, அகமத் பிரதர்ஸ் நிறுவன நிர்வாகி சபானா, பாராஸ் ஜூவல்லரி உரிமையாளர் உத்தமன், ரோட்டரி சங்கத் தலைவர் நிஷா, வேர்கள் அறக்கட்டளை அலெக்ஸ் ராஜா உள்ளிட்டோர் கலந்து கொண்டு குத்துவிளக்கேற்றி புதிய சொரென்டோ கார்களை அறிமுகம் செய்து வைத்தனர்.

தொடர்ந்து, வாடிக்கையாளர்கள் மற்றும் பொதுமக்களுக்கு மரக்கன்றுகள் வழங்கப்பட்டன. நிகழ்ச்சியில் கியா நிறுவன CEO கிருஷ்ணசாமி, உதவி பொது மேலாளர் சத்ய மோகன், ஏரியா சேல்ஸ் மேனேஜர் பாலா நிமலன், ஷோரூம் ஊழியர்கள், வாடிக்கையாளர்கள் மற்றும் பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டனர். 

புதிய சொரென்டோ காரின் சிறப்பம்சங்கள் குறித்து உதவி பொது மேலாளர் சத்ய மோகன் கூறுகையில்:- “கியா சொரென்டோவின் 5-வது தலைமுறை மாடலை இன்று அறிமுகம் செய்துள்ளோம். இந்தியாவில் கியா நிறுவனத்தின் கார்களில் முதல்முறையாக ஹைபிரிட் மாடல் அறிமுகமாகியுள்ளது. இதனுடன் டீசல் மாடலும் விற்பனைக்கு உள்ளது. கார்களின் விலை ரூ.27 லட்சத்தில் தொடங்கி, மாடலுக்கு ஏற்ப ரூ.50 லட்சம் வரை உள்ளது. ஷோரூமுக்கு நேரில் வரும் வாடிக்கையாளர்களுக்கு காரின் சிறப்பம்சங்கள் குறித்து விளக்கப்படும். டெஸ்ட் டிரைவ் வசதியும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இன்று நடைபெற்ற அறிமுக விழாவிலேயே 10 புக்கிங்குகள் கிடைத்துள்ளன. இந்திய அளவில் இந்த மாடலுக்கு எதிர்பார்த்ததைவிட நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. இன்னும் ஒரு வாரத்தில் டெஸ்ட் டிரைவ் கார் வந்துவிடும்; அதன் பின்னர் வாடிக்கையாளர்கள் காரை ஓட்டிப் பார்த்து அனுபவிக்கலாம்” என்றார். புதிய கியா சொரென்டோவில் 1.6 லிட்டர் டர்போ பெட்ரோல் ஸ்ட்ராங் ஹைபிரிட் (HEV) மற்றும் 2.2 லிட்டர் டர்போ டீசல் என இரு வகையான இன்ஜின் தேர்வுகள் வழங்கப்படுகின்றன. ஹைபிரிட் மாடலில் குறிப்பிட்ட உயர்தர வேரியண்ட்களில் AWD வசதியும், டீசல் மாடலில் 6 மற்றும் 7 இருக்கை தேர்வுகளுடன் உயர்தர வேரியண்ட்களில் AWD வசதியும் இடம்பெற்றுள்ளன.