திருச்சியில் மேம்பட்ட செவித்திறன் சிகிச்சை மற்றும் நவீன செவிப்புக் கருவிகளுக்கான புதிய மையம் திறப்பு - WS Audiology, Arun Hearing Aid இணைந்து தொடக்கம்!
செவித்திறன் பராமரிப்புத் துறையில் உலகளவில் செயல்பட்டு வரும் WS Audiology (WSA) நிறுவனம், இந்தியாவில் தனது விரிவாக்கத்தின் ஒரு பகுதியாக திருச்சியில் புதிய Brilliant Sound Galaxy (BSG) மையத்தைத் தொடங்கியுள்ளது.
Arun Hearing Aid நிறுவனத்துடன் இணைந்து தொடங்கப்பட்டுள்ள இந்த மையம், மேம்பட்ட செவித்திறன் பராமரிப்பு மற்றும் நவீன செவிப்புக் கருவிகளை பொதுமக்களுக்கு எளிதாகக் கிடைக்கச் செய்வதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
திருச்சி கண்டோன்மென்ட் பகுதியில் உள்ள ஜென்னி பிளாசாவில் அமைந்துள்ள இந்த புதிய மையத்தில், தொழில்முறை ஆடியோலஜி சேவைகள், நவீன செவிப்புக் கருவித் தொழில்நுட்பங்கள் மற்றும் தனிநபர்களின் வாழ்க்கை முறை மற்றும் கேட்கும் தேவைகளுக்கு ஏற்ப செவித்திறன் தீர்வுகளை அறிந்துகொள்ளும் வகையிலான நவீன சூழல் ஆகியவை ஒருங்கிணைக்கப்பட்டுள்ளன.
சமூக நலன் மற்றும் விழிப்புணர்வு நடவடிக்கைகள் இந்த மையத்தின் தொடக்கத்துடன் இணைந்து, WS Audiology, Arun Hearing Aid மற்றும் Suryodaya Foundation ஆகியவை இணைந்து சமூக நலன் மற்றும் CSR நடவடிக்கைகளையும் மேற்கொள்கின்றன. இதன் மூலம் செவித்திறன் தொடர்பான விழிப்புணர்வை ஏற்படுத்துவதுடன், பொதுமக்கள் தங்களது செவித்திறனை முன்கூட்டியே பரிசோதனை செய்து கொள்வதன் அவசியம் குறித்தும் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட உள்ளது. மேலும், தேவைப்படுபவர்களுக்கு செவித்திறன் பரிசோதனை, உரிய செவிப்புக் கருவிகள் மற்றும் தேவையான வழிகாட்டுதல்களை வழங்கும் நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படுகின்றன.
WS Audiology India நிறுவனத்தின் CEO மற்றும் Managing Director அவினாஷ் பவார் கூறுகையில், “Brilliant Sound Galaxy மூலம் செவித்திறன் பராமரிப்பு அனுபவத்தை மக்களுக்கு மேலும் எளிமையானதாகவும், தனிப்பயனாக்கப்பட்டதாகவும், அனைவருக்கும் அணுகக்கூடியதாகவும் மாற்றுவதே எங்களது நோக்கம். திருச்சியில் Arun Hearing Aid உடனான இந்த கூட்டணி மூலம் இந்த சேவையை பொதுமக்களுக்கு நெருக்கமாக கொண்டு வர முடிகிறது. Suryodaya Foundation உடன் இணைந்து CSR நடவடிக்கைகள் மூலமாகவும் சமூகத்திற்கு பங்களிக்கிறோம்” என்றார்.
Arun Hearing Aid நிறுவனத்தின் ஆடியோலஜி நிபுணத்துவத்துடன் இணைந்து செயல்படும் இந்த மையத்தில், நவீன செவித்திறன் தொழில்நுட்பங்களை பொதுமக்கள் நேரடியாக அனுபவித்து அறிந்துகொள்ளும் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. ஒவ்வொருவரின் செவித்திறன் மற்றும் கேட்கும் தேவைகளைப் புரிந்துகொண்டு, அதற்கேற்ற தீர்வுகளை பரிந்துரைக்கும் வகையில் தொழில்முறை ஆலோசனைகளும் வழங்கப்படுகின்றன.
Arun Hearing Aid நிறுவனத்தின் பிரதிநிதி அருண் கூறுகையில்,
“WS Audiology நிறுவனத்துடன் இணைந்து திருச்சியில் Brilliant Sound Galaxy மையத்தை தொடங்குவதில் மகிழ்ச்சி அடைகிறோம். மேம்பட்ட செவித்திறன் தீர்வுகளை வழங்குவதுடன், செவித்திறன் குறித்த விழிப்புணர்வை அதிகரித்து, CSR நடவடிக்கைகள் மூலம் சமூகத்திற்கு உதவுவதும் எங்களது நோக்கம்” என்றார். Suryodaya Foundation பங்களிப்பு பத்மஸ்ரீ விருது பெற்ற பிரபல பின்னணிப் பாடகி அனுராதா பவால் நிறுவிய Suryodaya Foundation, சமூகத்தில் பின்தங்கிய மற்றும் தேவையுள்ள மக்களுக்கு உதவும் பல்வேறு சமூக நலத் திட்டங்களை மேற்கொண்டு வருகிறது.
திருச்சி திட்டத்தின் ஒரு பகுதியாக, சமூக விழிப்புணர்வு நடவடிக்கைகள் மற்றும் செவித்திறன் பராமரிப்பு திட்டத்தை மக்களிடம் கொண்டு சேர்ப்பதில் இந்த அமைப்பு பங்களிக்கிறது. இதன் மூலம் பயனாளிகளுக்கு செவித்திறன் பரிசோதனை, செவிப்புக் கருவிகள் மற்றும் உரிய வழிகாட்டுதல்கள் கிடைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது. 140 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவம் WS Audiology நிறுவனம் 140 ஆண்டுகளுக்கும் மேலாக செவித்திறன் பராமரிப்புத் துறையில் செயல்பட்டு வருகிறது.
உலகளவில் 130-க்கும் மேற்பட்ட சந்தைகளில் செயல்படும் இந்நிறுவனத்தில் 12,500-க்கும் மேற்பட்டோர் பணியாற்றி வருகின்றனர். Widex, Signia உள்ளிட்ட பிராண்டுகள் மூலம் செவித்திறன் தொடர்பான தொழில்நுட்பங்களை வழங்கி வருகிறது. 2005ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட Arun Hearing Aid, தென்னிந்தியாவில் செவித்திறன் பராமரிப்பு மற்றும் ஆடியோலஜி சேவைகளை வழங்கி வருகிறது. தற்போது தென்னிந்தியாவின் பல்வேறு பகுதிகளில் 16 கிளைகளுடன் செயல்பட்டு வருவதாக நிறுவனம் தெரிவித்துள்ளது. திருச்சியில் புதிய Brilliant Sound Galaxy மையம் தொடங்கப்பட்டுள்ளதன் மூலம், நவீன செவித்திறன் பராமரிப்பு சேவைகள் மற்றும் தொழில்நுட்பங்களை திருச்சி மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளைச் சேர்ந்த மக்களுக்கு மேலும் எளிதாகக் கொண்டு சேர்க்க முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.