சமயபுரம் மாரியம்மன் கோவில் மூன்றாவது வார பூச்சொரிதல் விழா - ச.கண்ணனூர் பேரூராட்சி சார்பில் 19 ஆம் ஆண்டாக எடுத்து வந்து வழிபாடு!
Samayapuram Mariamman Temple: Third-Week 'Poochoridhal' Festival — Worship Procession Conducted for the 19th Consecutive Year on Behalf of the S. Kannanur Town Panchayat!
சக்தி ஸ்தலங்களில் பிரசித்தி பெற்றது சமயபுரம் மாரியம்மன் கோவிலாகும். இக்கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் சித்திரை தேரோட்டம் வெகு விமரிசையாக நடைபெறுவது வழக்கம் அதன் படி இந்த ஆண்டு சித்திரை தேரோட்டத்தை முன்னிட்டு பூச்சொரிதல் விழா கடந்த 8 ந்தேதி தொடங்கியது. இந்நிலையில் மூன்றாவது வார பூச்சொரிதல் விழாவான இன்று சமயபுரம் கண்ணனூர் பேரூராட்சி நிர்வாகத்தின் சார்பில் 19 வது ஆண்டாக சமயபுரம் அருள்மிகு மாரியம்மனுக்கு பேரூராட்சி அலுவலகத்தில் பேரூராட்சி தலைவர் சரவணன் செயல் அலுவலர் கணேசன் மற்றும் பேரூராட்சி கவுன்சிலர்கள் அலுவலக பணியாளர்கள் மட்டுமல்லாது, திருச்சி மாவட்டத்தில் உள்ள 16 பேரூராட்சி அலுவலர்கள் மற்றும் பணியாளர்கள் அவர்களது குடும்பத்தினர்கள் ஒருமித்து 300 க்கு மேற்பட்டோர் சமயபுரம் பேரூராட்சி அலுவலகத்தில் ஒன்று கூடி, அம்மனின் திரு உருவ படத்திற்கு சிறப்பு பூஜைகள் செய்த பின்னர், குதிரை ஊர்வலத்துடன், வானவேடிக்கையுடன் மேல தாளங்கள் முழங்க, தட்டுகளில் பூக்களை ஏந்தி தேரோடும் வீதியில் ஊர்வலமாக சென்று அம்மனுக்கு பூக்களை சாற்றினர்.
இன்று மூன்றாவது வார பூச்செரிதல் விழாவை முன்னிட்டு சமயபுரம் விழாக்கோலம் பூண்டது. விழாவில் சா.கண்ணனூர் பேரூராட்சி தலைவர் சரவணன் செயல் அலுவலர் கணேசன், பழனி ஆயக்குடி செயல் அலுவலர் சதீஷ்குமார், சிதம்பரம் செயல் அலுவலர் சாகுல் ஹமீது, பொன்னம்பட்டி செயல் அலுவலர் அழகேந்திரன் மற்றும் பேரூராட்சி கவுன்சிலர்கள் ரங்க பிரபு, கனிமொழி ரங்க பிரபு, பிரவின், கலைவாணி, ராதாகிருஷ்ணன், பாக்கியா பிரகாஷ், சாந்தி பாலகிருஷ்ணன், அலுவலக பணியாளர்கள் பலர் கலந்து கொண்டனர்.