தலைமை தேர்தல் ஆணையர் பதவி விலக வலியுறுத்தி திருச்சியில் எஸ்டிபிஐ கண்டன ஆர்ப்பாட்டம்!
இந்திய ஜனநாயகத்தின் நம்பகத்தன்மையை சிதைக்கும் வகையில் செயல்பட்டு வரும், தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் பதவி விலக வலியுறுத்தியும், அரசியல் அழுத்தங்களுக்காக தன்னிச்சையாக கொண்டு வரப்பட்ட S.I.R நடவடிக்கையை நீக்க வலியுறுத்தியும், திருச்சி தெற்கு மாவட்ட SDPI கட்சி சார்பில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம், பாலக்கரை ரவுண்டானா பகுதியில் இன்று நடைபெற்றது.
ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்டத் தலைவர் K. தமீம் அன்சாரி தலைமை வகித்தார். வர்த்தகர் அணி மாநில பொதுச் செயலாளர் கே. முபாரக் அலி, மாவட்ட துணைத் தலைவர் Y. ரஹீம், மாவட்ட அமைப்பு பொதுச் செயலாளர் M. அப்சல் கான், TCEH மாவட்ட செயலாளர் Er. சதாம் உசேன், மாவட்ட பொருளாளர் பிச்சைக்கனி, மாவட்ட ஊடக ஒருங்கிணைப்பாளர் A.S. அப்துல் காதர் (பாபு), மாவட்ட செயற்குழு உறுப்பினர் ஏர்போர்ட் மஜீத், Young Democrats மாநில ஒருங்கிணைப்புக் குழு உறுப்பினர் ரபீக் உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர்.
ஆர்ப்பாட்டத்தில் சிறப்பு அழைப்பாளராக SDPI கட்சியின் தமிழ்நாடு மாநிலச் செயலாளர் இமாம் R. ஹஸ்ஸான் பைஜி கலந்து கொண்டு, தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் பதவி விலக வலியுறுத்தி கண்டன உரையாற்றினார். மேலும், மகஇக மாநில பொதுச் செயலாளர் கோவன் கலந்து கொண்டு கண்டன உரையாற்றினார்.
மேற்கு தொகுதி செயலாளர் KSA. ரியாஸ், வர்த்தகர் அணி மாவட்ட செயலாளர் மார்க்கெட் ஷேக், திருவெறும்பூர் தொகுதி தலைவர் I. ஷேக் முகமது ஆகியோர் கண்டன கோஷங்களை எழுப்பினர். முன்னதாக மாவட்ட பொதுச் செயலாளர் Er. முகமது சித்திக் வரவேற்புரையாற்றினார். நிகழ்ச்சியை மாவட்ட துணைத் தலைவர் தளபதி அப்பாஸ் தொகுத்து வழங்கினார்.
இதில் கிழக்கு தொகுதி தலைவர் I. சபியுல்லா, செயலாளர் சுகைப், திருவெறும்பூர் தொகுதி துணைத் தலைவர் கைருதீன், மேற்கு தொகுதி தலைவர் சையது முஸ்தபா, பொருளாளர் ஷாஜகான், மணப்பாறை தொகுதி தலைவர் உமர், செயலாளர் ராஜா முகமது, மகளிர் அணி மாவட்டத் தலைவர் தாஜ் நிஷா, பொதுச் செயலாளர் தவுலத் நிஷா, SDTU மாவட்டத் தலைவர் சக்கரை மீரான், இணைச் செயலாளர் இலியாஸ், வர்த்தகர் அணி மாவட்ட செயலாளர் அப்துல் மாலிக், சுற்றுச்சூழல் அணி மாவட்டத் தலைவர் ஹக்கீம், Young Democrats மாவட்ட ஒருங்கிணைப்பாளர் பைசல், துணை ஒருங்கிணைப்பாளர்கள் முகமது அலி, தமீம் அன்சாரி, வழக்கறிஞர் அணி இணைச் செயலாளர் மசூதா மரியம் உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள், தொகுதி மற்றும் அணி நிர்வாகிகள் கலந்து கொண்டு தங்களது கண்டனங்களை பதிவு செய்தனர். இறுதியாக கிழக்கு தொகுதி துணைத் தலைவர் இம்தியாஸ் நன்றியுரை வழங்கினார்.