திருச்சியில் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை சார்பில் ஆய்வுக்கூட்டம்; அமைச்சர் செங்கோட்டையன் பங்கேற்பு!
திருச்சியில் வருவாய் பேரிடர் மேலாண்மை துறை ஆய்வு கூட்டம் - அமைச்சர் செங்கோட்டையன் பங்கேற்பு!
திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்ட அரங்கில் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை பணிகள் குறித்த ஆய்வு கூட்டம், மாவட்ட ஆட்சியர் பிரதிக் தாயள் தலைமையில் இன்று நடைபெற்றது. இதில் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை அமைச்சர் செங்கோட்டையன் கலந்து கொண்டு ஆலோசனைகள் வழங்கினார். இதில் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை சார்பாக இதுவரை என்னென்ன பணிகள் முடிக்கப்பட்டுள்ளது. புதிய பணிகள் எவ்வாறு நடைபெற்று வருகிறது என்பது குறித்து விரிவாக ஆலோசிக்கப்பட்டது. மேலும் நகர் புறங்களில் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை சார்பாக நடைபெற்று வரும் பணிகள், முடிவுற்ற பணிகள் குறித்து விரிவாக எடுத்துரைக்க வேண்டும் எனவும், குறிப்பாக திருச்சி கிழக்கு தொகுதியில் வருவாய் துறை சார்பாக என்னென்ன பணிகள் முடிவுற்று உள்ளது. புதிய பணிகள் எவ்வாறு நடைபெற்று வருகிறது என்பது குறித்து விரிவாக அதிகாரிகள் தெரிவிக்க வேண்டும் என அமைச்சர் செங்கோட்டையன் அதிகாரிகளிடம் கேட்டுக்கொண்டார். இந்நிகழ்வில் தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரிய தலைவர் குபா. கிருஷ்ணன், காங்கிரஸ் எம்பி கிறிஸ்டோபர் திலக், முசிறி சட்டமன்ற உறுப்பினர் விக்னேஷ், திருவெறும்பூர் சட்டமன்ற உறுப்பினர் நவல்பட்டு விஜி மற்றும் அரசுத்துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.