திருச்சியில் லட்சிய ஜனநாயக கட்சியின் சார்பில் தேவர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை!

MsdMsd
Oct 30, 2026 - 18:06
திருச்சியில் லட்சிய ஜனநாயக கட்சியின் சார்பில் தேவர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை!

தேவர் ஜெயந்தி விழா - லஜக சார்பில் முத்துராமலிங்க தேவர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை!

பசும்பொன் முத்துராமலிங்கத் தேவரின் ஜெயந்தி மற்றும் குருபூஜை விழாவை முன்னிட்டு, லட்சிய ஜனநாயக கட்சியின் திருச்சி ஒருங்கிணைந்த மாவட்டம் சார்பில், மத்திய பேருந்து நிலையம் அருகே உள்ள தேவர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தும் நிகழ்ச்சி இன்று நடைபெற்றது.

இந்நிகழ்வில், லட்சிய ஜனநாயக கட்சியின் திருச்சி மாநகர் மாவட்ட செயலாளர் தில்லை எம்.ஆர். சதாம், தெற்கு மாவட்ட செயலாளர் கே.எஸ். கண்ணன் மற்றும் வடக்கு மாவட்ட செயலாளர் சசிகுமார் ஆகியோர் இணைந்து, முத்துராமலிங்கத் தேவரின் திருவுருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். 

மேலும், இந்நிகழ்ச்சியில் திருச்சி ஒருங்கிணைந்த மாவட்டத்தை சேர்ந்த கட்சி நிர்வாகிகள், பகுதி செயலாளர்கள், ஒன்றிய நிர்வாகிகள் மற்றும் பல்வேறு அணிகளின் நிர்வாகிகள் உள்ளிட்ட திரளான தொண்டர்கள் கலந்துகொண்டு தேவர் சிலைக்கு மரியாதை செலுத்தினர்.