புள்ளம்பாடி ஒன்றியத்தில் அதிமுக வேட்பாளர் லீமா ரோஸ் மார்ட்டின் சூறாவளி பிரச்சாரம் - பொதுமக்கள் அமோக வரவேற்பு!
தமிழக சட்டமன்றத் தேர்தல் வரும் ஏப்ரல் 23ஆம் தேதி நடைபெற உள்ளது. இதனை முன்னிட்டு அரசியல் கட்சிகள் தங்களது வேட்பாளர்களின் பட்டியலை வெளியிட்டு பணிகளை தீவிரப்படுத்தி உள்ளது. வேட்பாளர்களும் வேட்பு மனுவை தாக்கல் செய்து தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
அந்த வகையில் திருச்சி மாவட்டம் லால்குடி சட்டமன்ற தொகுதியில், தேசிய ஜனநாயக கூட்டணியின் சார்பில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர் லீமா ரோஸ் மார்ட்டின் தொகுதி முழுவதும் சுற்றுப்பயணம் செய்து நிர்வாகிகள் மற்றும் பொதுமக்களை சந்தித்து ஆதரவு திரட்டி வருகிறார். இந்நிலையில் இன்று புள்ளம்பாடி வடக்கு ஒன்றியத்திற்கு உட்பட்ட ஊட்டத்தூர், தொரணி பாளையம், நல்லூர், சிறுகளப்பூர், நம்புகுறிச்சி, பெருவளப்பூர், காணக்கிளியநல்லூர், சிறுவயலூர், தாப்பாய், வரகுப்பை, அழுந்தலைப்பூர், கருடமங்கலம் ஆகிய பகுதிகளில் வேட்பாளர் லிமாரோஸ் மார்ட்டின் பொது மக்களிடம் தேர்தல் வாக்குறுதிகள் வாக்குறுதிகளை எடுத்துக் கூறி, இரட்டை இலை சின்னத்திற்கு வாக்களிக்குமாறு தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். வேட்பாளர் லீமா ரோஸ் மார்ட்டினுக்கு செல்லும் இடங்களில் எல்லாம் பொதுமக்கள் உற்சாக வரவேற்பளித்து, தங்களது ஆதரவை தெரிவித்தனர். இந்த பிரச்சாரத்தின் போது அதிமுக தெற்கு மாவட்ட செயலாளர் முன்னாள் எம்பி பா.குமார், முன்னாள் அமைச்சர் சிவபதி மற்றும் தேசிய ஜனநாயக கூட்டணி கட்சி நிர்வாகிகள், உறுப்பினர்கள் திரளாக கலந்து கொண்டு, இரட்டை இலை சின்னத்திற்கு வாக்கு சேகரித்தனர்.