உறையூர் வெக்காளியம்மன் கோவில் பகுதியில், அமமுக மேற்கு தொகுதி வேட்பாளர் ராஜசேகரன் தீவிர பிரச்சாரம்!

MsdMsd
Apr 3, 2026 - 22:13
Apr 4, 2026 - 09:48
உறையூர் வெக்காளியம்மன் கோவில் பகுதியில், அமமுக மேற்கு தொகுதி வேட்பாளர் ராஜசேகரன் தீவிர பிரச்சாரம்!

நடைபெற உள்ள சட்டமன்றத் தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணியின் சார்பில் திருச்சி மேற்கு தொகுதியில் போட்டியிடும் அமமுக வேட்பாளர் ராஜசேகரன், வேட்பு மனு தாக்கல் செய்து தொகுதி முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு, கூட்டணி கட்சி நிர்வாகிகள் மற்றும் பொதுமக்களை சந்தித்து தீவிர பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறார்.

அந்த வகையில் இன்று திருச்சி உறையூர் வெக்காளியம்மன் கோவிலில் சிறப்பு பூஜை செய்து வழிபட்ட பின் தனது பிரச்சாரத்தை தொடங்கினார். அப்பகுதியில் அமைந்துள்ள சாலையோர கடைகள் மற்றும் பொதுமக்களை சந்தித்து, தொகுதியின் தற்போதைய எம்எல்ஏ கே.என்.நேரு செய்த ஊழல்களை எடுத்துக் கூறி, NDA கூட்டணியின் தேர்தல் வாக்குறுதிகளை எடுத்துக் கூறி, துண்டு பிரசுரங்களை வழங்கி, குக்கர் சின்னத்தில் வாக்களிக்க வேண்டும் என தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.

வேட்பாளர் ராஜசேகரன் செல்லும் இடங்களில் எல்லாம் பொதுமக்கள் முக மலர்ச்சியுடன் உற்சாக வரவேற்பு அளித்து, தங்களது ஆதரவை தெரிவித்து வருகின்றனர். இந்த தேர்தல் பிரச்சாரத்தின் போது அமமுக தெற்கு மாவட்ட செயலாளர் செந்தில்நாதன் மற்றும் தேசிய ஜனநாயக கூட்டணி கட்சி மாவட்ட நிர்வாகிகள், உறுப்பினர்கள் திரளாக கலந்து கொண்டு, வேட்பாளர் ராஜசேகரனுக்கு ஆதரவாக குக்கர் சின்னத்திற்கு வாக்கு சேகரித்தனர்.