விவசாய இடுபொருள் வியாபாரிகள் சங்க பொதுக்குழு!

MsdMsd
Mar 23, 2026 - 08:30
விவசாய இடுபொருள் வியாபாரிகள் சங்க பொதுக்குழு!

திருச்சி மாவட்ட விவசாய இடுபொருள் வியாபாரிகள் சங்கத்தின் பொதுக்குழு மற்றும் குடும்ப விழா, திருச்சி பால்பண்ணை பகுதியில் நடைபெற்றது. திருச்சி மாவட்ட தலைவர் சின்னத்துரை தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் சிறப்பு அழைப்பாளர்களாக, திருச்சி வேளாண்மை இணை இயக்குனர் வசந்தா மற்றும் திருச்சி நகைச்சுவை மன்ற செயலாளர் சிவகுருநாதன் ஆகியோர் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினர். மேலும் இக்கூட்டத்தில் மாநில தலைவர் சிவக்குமார், மாநில செயலாளர் ரகுராமன், மாநில பொருளாளர் பாலசுப்பிரமணியன் மற்றும் மாநில, மாவட்ட நிர்வாகிகள் தங்களது குடும்பத்துடன் கலந்து கொண்டனர். இக்கூட்டத்தில் தமிழகத்தின் மையப்பகுதியாக விளங்கும் திருச்சியில் மாநில சங்க கட்டிடம் கட்டுவதற்கு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் எனவும், உரங்களின் விலை உயர்ந்துள்ளதை முன்னிட்டு உரங்களின் அடக்க விலையில் இருந்து 10% முதல் 15 சதவீதம் வரை கமிஷன் கொடுக்க மாநில சங்கமும், அகில இந்திய சங்கமும் மத்திய மாநில அரசுகளை நாடி பெற்று தர வேண்டும் உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.