மண்ணச்சநல்லூர் தொகுதி வேட்பாளர் கதிரவன் தீவிர பிரச்சாரம் - மக்கள் அமோக வரவேற்பு!
நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தலில், மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பில், திருச்சி மண்ணச்சநல்லூர் சட்டமன்ற தொகுதியில் போட்டியிடும் வேட்பாளர் கதிரவன், வேட்புமனு தாக்கல் செய்து, தொகுதி முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு, கூட்டணி கட்சி நிர்வாகிகள் மற்றும் பொதுமக்களை சந்தித்து ஆதரவு திரட்டி வருகிறார்.
அந்தவகையில் இன்று மண்ணச்சநல்லூர் தொகுதிக்கு உட்பட்ட அய்யம்பாளையம் ஊராட்சியில் வேட்பாளர் கதிரவன் தீவிர பிரச்சாரம் மேற்கொண்டார். அப்பகுதியில் ஒவ்வொரு வீடாக சென்று, திமுக அரசின் ஐந்தாண்டு கால சாதனைகளை எடுத்துக்கூறி, உதய சூரியன் சின்னத்திற்கு வாக்கு சேகரித்தார். பிரச்சாரத்தின் போது அப்பகுதி மக்கள் வேட்பாளர் கதிரவனுக்கு ஆரத்தி எடுத்து, மாலை அணிவித்து முக மலர்ச்சியோடு வரவேற்பு அளித்தனர். மேலும் இந்த தொகுதிக்கு பல்வேறு திட்டங்களை செய்துள்ள உங்களுக்கு, வாக்காளர்களாகிய தங்களின் ஆதரவு என்றென்றும் உண்டு என பொதுமக்கள் தெரிவித்தனர். இந்த பிரச்சாரத்தின் போது மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி கட்சியின் நிர்வாகிகள், உறுப்பினர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.