நேரு போன்ற பச்சை துரோகிகள் தமிழ்நாட்டில் இருக்கக் கூடாது - அமமுக வேட்பாளர் ராஜசேகரன் கடும் தாக்கு!

MsdMsd
Apr 8, 2026 - 09:38
Apr 8, 2026 - 09:39
நேரு போன்ற பச்சை துரோகிகள் தமிழ்நாட்டில் இருக்கக் கூடாது - அமமுக வேட்பாளர் ராஜசேகரன் கடும் தாக்கு!

தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் திருச்சி மேற்கு தொகுதியில் போட்டியிடும் அமமுக வேட்பாளர் ராஜசேகரன், தொகுதி முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு பொதுமக்களை சந்தித்து தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகிறார்.

அந்த வகையில் நேற்று திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலக சாலை, சின்ன மிளகுபாறை, கோரிமேடு, புது தெரு, நாயகர் தெரு உள்ளிட்ட பகுதிகளில் பிரச்சார வாகனத்தில் சென்று தேசிய ஜனநாயக கூட்டணியில் தேர்தல் வாக்குறுதிகளை எடுத்துக் கூறி, தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.

அப்போது வேட்பாளர் ராஜசேகரன் பேசுகையில்,... இந்த தொகுதி அமைச்சர் கே.என்.நேரு பல்வேறு ஊழல்கள் செய்துள்ளார். இந்த தொகுதி மக்களுக்கு துரோகம் செய்த நேருவை, இந்த தொகுதி மக்கள் வீழ்த்த வேண்டும். அதற்கு ஒரே ஆயுதம் உங்கள் ஓட்டு. நேரு போன்ற பச்சை துரோகிகள் தமிழ்நாட்டில் இருக்கக் கூடாது. அதற்கு நீங்கள் தேசிய ஜனநாயக கூட்டணி கட்சியின் வேட்பாளராகிய எனக்கு குக்கர் சின்னத்தில் வாக்களிக்க வேண்டும் என பேசினார்.

வேட்பாளர் ராஜசேகரன் பிரச்சாரத்திற்கு செல்லும் இடங்களில் எல்லாம் மக்கள் ஆரத்தி எடுத்து மாலை அணிவித்து உற்சாக வரவேற்பு அளித்து வருகின்றனர் இந்த பிரச்சாரத்தின் போது அமமுக தெற்கு மாவட்ட செயலாளர் செந்தில்நாதன் மற்றும் தேசிய ஜனநாயக கூட்டணி கட்சியின் மாவட்ட தலைவர்கள், நிர்வாகிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.