அமைச்சர் நேருவை ஆதரித்து, திருச்சி மேற்கு தொகுதியில் உதயநிதி ஸ்டாலின் பிரச்சாரம்!

MsdMsd
Apr 11, 2026 - 23:15
Apr 11, 2026 - 23:18
அமைச்சர் நேருவை ஆதரித்து, திருச்சி மேற்கு தொகுதியில் உதயநிதி ஸ்டாலின் பிரச்சாரம்!

திருச்சி மேற்கு தொகுதி திமுக வேட்பாளர் அமைச்சர் கே.என்.நேருவை ஆதரித்து தென்னூர் பகுதியில் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பிரச்சாரம் மேற்கொண்டார். அப்போது பேசிய அவர்:--

 2021 ல் திருச்சி சிறுகனூரில் நேரு மாநாடு நடத்தினார். திமுக ஆட்சி அமைத்தது. 2026 ல் மாநாடு நடத்தினார். மீண்டும் திமுக ஆட்சி அமைக்கும். திருச்சி மேற்கு தொகுதியில் ஏராளமான நலத்திட்டஙகள் செய்து கொடுக்கப்பட்டுள்ளது. அதற்கு முத்தாய்ப்பாக பஞ்சப்பூரில் ஏர்போர்ட்டை மிஞ்சும் அளவிற்கு பஸ் ஸ்டாண்டை கட்டி கொடுத்துள்ளார்.

கே.என்.நேருவை நேரடியாக வீழ்த்த முடியாது என்பதற்காக அவரை வீழ்த்த குறுக்கு வழியை பயன்படுத்துகிறார்கள். பாஸிச பாஜகவின் மிரட்டல்களுக்கு திமுகவின் கடைக்கோடி தொண்டர்களே பயப்படமாட்டார்கள். நேரு எப்படி பயப்படுவார் ?

மகளிர் உரிமைத் தொகையை நிறுத்த பார்த்தார்கள். ஆனால் அதை அறிந்து கொண்ட முதலமைச்சர் ஐயாயிரம் ரூபாய் பணத்தை வழங்கினார். இந்த தொகுதியில் எம்.எல்.ஏவை மட்டும் தேர்ந்தெடுக்கவில்லை. தமிழ்நாட்டின் மிக முக்கியமான அமைச்சரை தேர்ந்தெடுக்க உள்ளீர்கள்.

கடந்த ஐந்தாண்டுகளில் செயல்படுத்தப்பட்ட திட்டங்களுக்கு ஒன்றிய அரசு துணை நிற்கவில்லை, நிதி ஒதுக்கவில்லை. தமிழ்நாட்டு அணிக்கு ஸ்டாலின் தான் கேப்டன். டெல்லி அணிக்கு மோடி தான் கேப்டன்.

மோடி என்ன சொன்னாலும் எடப்பாடி கேட்டுக்கொண்டு முரட்டு அடிமையா இருக்கிறார். அவர் முதலமைச்சராக இருந்த பொழுது தமிழ்நாட்டின் உரிமைகளை விட்டுக் கொடுத்தார். சங்கி கூட்டத்திடம் பயப்படும் அனுபவம் எனக்கு கிடையாது. சசிகலா காலில் விழுந்து தான் எடப்பாடி பழனிச்சாமி முதலமைச்சர் ஆனார் என நான் கூறினேன். சசிகலா நான் கூறுவதை உறுதி செய்துள்ளார்.

பாஜகவை தமிழ்நாட்டு மக்கள் நேரடியாக வந்தால் ஏற்றுக் கொள்ள மாட்டார்கள் என தெரிந்து கொண்டே தான் அதிமுக என்கிற போர்வையை போர்த்தி கொண்டு நுழைய பார்க்கிறார்கள். எப்படி வந்தாலும் நாம் டெல்லிக்கு அவுட் ஆஃப் கன்ரோல் என்பதை நிரூபிக்க வேண்டும் என்றார்.