திருச்சி ஆழ்வார் தோப்பு பகுதியில், சிறுபான்மையினரிடம் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்ட மேற்கு தொகுதி வேட்பாளர் ராஜசேகரன்!

MsdMsd
Apr 12, 2026 - 21:35
திருச்சி ஆழ்வார் தோப்பு பகுதியில், சிறுபான்மையினரிடம் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்ட மேற்கு தொகுதி வேட்பாளர் ராஜசேகரன்!

நடைபெற உள்ள சட்டமன்றத் தேர்தலில், தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில், திருச்சி மேற்கு தொகுதியில் போட்டியிடும் அமமுக வேட்பாளர் ராஜசேகரன், தொகுதி முழுவதும் தீவிர சுற்றுப்பயணம் செய்து பிரச்சாரம் செய்து வருகிறார்.

அந்தவகையில் இன்று (ஏப்.12) 29-வது வார்டுக்கு உட்பட்ட ஆழ்வார் தோப்பு, காஜா தோப்பு, இதயத்துல்லா நகர், அண்ட கொண்டான் தெரு, சத்யா நகர், பாரதி நகர் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் ஒவ்வொரு வீதியாக சென்று, பொது மக்களை நேரில் சந்தித்து, திமுக அரசின் ஊழல்களையும், அதிமுக அரசின் சாதனைகளையும், தேசிய ஜனநாயக கூட்டணியின் தேர்தல் வாக்குறுதிகளையும் எடுத்துக்கூறி குக்கர் சின்னத்திற்கு வாக்களிக்குமாறு கேட்டுக் கொண்டார்.

வேட்பாளர் ராஜசேகரன் பிரச்சாரத்திற்கு செல்லும் இடங்களில் பொதுமக்கள் ஆரத்தி எடுத்து, மாலை அணிவித்து, தங்களது குடும்பத்தில் ஒருவராக பாவித்து, உற்சாக வரவேற்பு அளித்து வருகின்றனர். இந்த தேர்தல் பிரச்சாரத்தின் போது தேசிய ஜனநாயக கூட்டணி கட்சிகளின் மாவட்ட தலைவர்கள் நிர்வாகிகள் தொண்டர்கள் உட்பட பலர் கலந்து கொண்டு, குக்கர் சின்னத்திற்கு வாக்கு சேகரித்தனர்.