லியோனி பரப்புரையின் போது பாட்டில் வீச்சு - போலீசார் விசாரணை!
மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பில் திருச்சி கிழக்கு தொகுதியில் திமுக வேட்பாளர் இனிகோ இருதயராஜ் போட்டியிடுகிறார். வேட்பாளர் இனிகோ இருதயராஜை ஆதரித்து தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழகத்தின் தலைவரும், பட்டிமன்ற பேச்சாளருமான திண்டுக்கல் லியோனி, இன்று திருச்சி கிழக்கு தொகுதிக்குட்பட்ட கீழப்புதூர் அரச மரத்தடி பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்டார். அப்போது லியோனி பேசிக் கொண்டிருக்கும்போது மர்ம நபர்கள் எரிந்த கண்ணாடி பாட்டில் ஒன்று பிரச்சார வாகனத்தின் மேல் வந்து விழுந்து உடைந்து தெறித்தது. இதனால் லியோனி அதிர்ச்சி அடைந்தார். அவருக்கு நல்வாய்ப்பாக காயங்கள் ஏற்படவில்லை. இதுகுறித்து மாநகர காவல் துறையினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.