ஶ்ரீரங்கம் தொகுதி அதிமுக வேட்பாளர் மனோகரன் சூறாவளி பிரச்சாரம் - பொதுமக்கள் அமோக ஆதரவு!

MsdMsd
Apr 20, 2026 - 08:14
ஶ்ரீரங்கம் தொகுதி அதிமுக வேட்பாளர் மனோகரன் சூறாவளி பிரச்சாரம் - பொதுமக்கள் அமோக ஆதரவு!

தமிழக சட்டமன்றத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு வரும் 23ஆம் தேதி நடைபெற உள்ள நிலையில், தேர்தல் பிரச்சாரம் நாளை மாலை 6 மணியுடன் நிறைவு பெறுகிறது. இதனை ஒட்டி வேட்பாளர்கள் தங்களது பிரச்சாரத்தை தீவிரப் படுத்தி உள்ளனர். அந்த வகையில் திருச்சி மாவட்டம் ஸ்ரீரங்கம் சட்டமன்ற தொகுதியில் தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர் மனோகரன் தொகுதிக்கு உட்பட்ட பகுதிகளில் தீவிர பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறார்.

வேட்பாளர் மனோகரன் ஒவ்வொரு பகுதியாக நேரில் சென்று பொது மக்களை சந்தித்து திமுக அரசின் ஐந்தாண்டு கால ஊழல்களை எடுத்துக் கூறியும், அதிமுக அரசின் தேர்தல் வாக்குறுதிகளை எடுத்துக் கூறியும் இரட்டை இலை சின்னத்திற்கு தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகிறார். வேட்பாளர் மனோகரன் செல்லும் இடங்களில் பொதுமக்கள் ஆரத்தி எடுத்தும், மாலை அணிவித்தும் உற்சாக வரவேற்பளித்து, தங்களது ஆதரவை வெளிப்படுத்தி வருகின்றனர். 

இந்த பிரச்சாரத்தின் போது தேசிய ஜனநாயக கூட்டணி கட்சியின் மாவட்ட தலைவர்கள் மற்றும் நிர்வாகிகள் திரளாக கலந்து கொண்டு இரட்டை இலை சின்னத்திற்கு வாக்கு சேகரித்தனர்.