"தமிழகத்தில் ஒரு மலர் மட்டும் மலராது" - ஸ்ரீரங்கம் திமுக வேட்பாளர் துரைராஜ் ஆதரித்து கமலஹாசன் பரப்புரை!
மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பில் திருச்சி ஸ்ரீரங்கம் சட்டமன்ற தொகுதியில் போட்டியிடும் வேட்பாளர் துரைராஜை ஆதரித்து, மக்கள் நீதி மையம் கட்சியின் தலைவர் கமலஹாசன், ஸ்ரீரங்கம் ராஜகோபுரம் முன்பு பரப்புரை மேற்கொண்டார்.
அப்போது பேசிய கமலஹாசன்:-- கடந்த ஐந்து ஆண்டுகளில் திமுக அரசால் மேற்கொள்ளப்பட்டுள்ள வளர்ச்சி திட்டங்கள் குறித்து எடுத்துக் கூறினார். குறிப்பாக மகளிர் உதவித்தொகை உயர்த்து வழங்குவது குறித்து எடுத்துக் கூறினார். தொடர்ந்து பேசிய அவர்,.. நாட்டிற்கு ஒரே மொழி சாத்தியமல்ல. ஒவ்வொரு மலரும் ஒவ்வொரு வண்ணத்தில் இருக்கும். நாம் அனைவரும் மலர்கள். மலர்ந்தே தீருவோம். ஆனால் தமிழகத்தில் ஒரு மலர் மட்டும் மலராது. வேட்பாளர் துரைராஜுக்கு உதயசூரியன் சின்னத்தில் வாக்களித்து வெற்றி பெற செய்யுங்கள் என கேட்டுக்கொண்டார் இந்த பிரச்சாரத்தின் போது வேட்பாளர் துரைராஜ் மற்றும் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி கட்சியின் மாவட்ட தலைவர்கள், நிர்வாகிகள் திரளாக கலந்து கொண்டனர்.