உழைப்பவர்களுக்கு தமிழக மக்கள் உரிய மதிப்பை தருவார்கள் - வாக்களித்த பின் அமைச்சர் அன்பில் மகேஷ் பேட்டி!
தமிழ்நாட்டில் சட்டமன்ற பொது தேர்தல் இன்று நடைபெற்று வருகிறது. இந்நிலையில் திருச்சி திருவெறும்பூர் தொகுதி திமுக வேட்பாளர் அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி வரகனேரி பகுதியில் அமைந்துள்ள TSM பள்ளியில் தனது மனைவி ஜனனியுடன் வந்து நீண்ட வரிசையில் காத்திருந்து தனது வாக்கை செலுத்தி ஜனநாயக கடமை ஆற்றினார்.
வாக்களித்த பின்னர் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் ....
எனது குடும்பத்தோடு வந்து ஜனநாயக கடமையை நிறைவேற்று உள்ளேன். எங்களுக்கு ஒரு தலைவரை சட்டமன்ற உறுப்பினர் தேர்ந்தெடுக்க வேண்டும் என்றால் குரல் கொடுத்தால் மட்டும் போதாது வாக்குச்சாவடிக்கு வந்து வாக்களிக்க வேண்டும் என எதிர்பார்க்கின்றோம். நேரம் தாழ்த்தாமல் முதல் கடமையாக வாக்களிக்க வேண்டும். 2016ல் புதிய அனுபவம், எந்தவித அனுபவம் இல்லாமல் முதல் முறையாக போட்டியிட்டபோது தொகுதி பற்றி எதுவும் தெரியாமல் என்னை எனது இயக்கத்தை சார்ந்தவர்கள் அழைத்துச் சென்றனர். தொடர்ந்து 2021 இல் வாக்குக்கட்டை சென்ற போது பல வழிமறித்து இது சொன்னீர்களே செய்தீர்களா என உரிமையாக குரல் கொடுத்தார்கள். 2026 யாரெல்லாம் என்னை வழிமறித் தேர்வு அவர்களின் கையைப் பிடித்து அழைத்துச் சென்று சொன்னது செய்தீர்களே என்று சொன்னது மகிழ்ச்சியாக இருந்தது. கடந்த 15நாட்களில் பார்த்து சேகரிப்பின் போது 32 மனுக்கள் பெற்றுள்ளேன் அது எப்படி வந்தது என்றால் சிறியதற்கு நன்றி சொல்லிவிட்டு மற்றவர்களை செய்து தாருங்கள் என கூறியுள்ளனர் மகிழ்ச்சியாக உள்ளது. மேக்ஸிமம் முடிந்த வரை செய்துள்ளோம் என்பது அனுபவமாக உள்ளது. ஒவ்வொரு குடும்பத்தில் ஒருவனாக இருக்க ஆசைப்பட்டேன் அதன் நிறைவேற்றி இருப்பதாகவே பார்க்கிறேன். மக்கள் திருப்பி மகேசன் தீர்ப்பு என்று சொல்வது போல எனது தாய் வீடாக உள்ள திருவரம்பூர் மக்களின் நல்ல தீர்ப்பு மகேசனுக்கு போகும் என்று நம்பிக்கை எனக்கு இருக்கிறது. தமிழ்நாடு முதலமைச்சர் பணியில் தான் ஒவ்வொரு இடத்தில் செல்லும்போதும் மகிழ்ச்சியான வரவேற்பை கொடுப்பதை பார்க்கும் போது பெண்கள் எந்த இயக்கத்திற்கு அதிகமாக நம்பிக்கை வைக்கிறார்களோ அந்தக் கட்சி ஆட்சிக்கு வரும் என்பது பொதுவாக நாம் பார்க்கக் கூடியது. தமிழக முதல்வர் கொண்டு வந்த திட்டம் தமிழக முழுவதும் பிரதிபலித்திருக்கிறது என்பதை கண்கூடாக பார்க்க முடிகிறது. பல கருத்துக்கணிப்புகளை கடந்து தமிழகத்தில் இதுல சொல்லியது போல வெல்லும் 200 படைப்பு வரலாறு என்ற நம்பிக்கை எங்களுக்கு இருக்கிறது. கிழக்கு தொகுதி பொறுத்த வரை எங்களது எம் எல் ஏ இனிக்கோ இருதயராஜ் ஆட்சி இருக்கின்ற பணி, பகுதி மக்களின் இன்பம் துணியில் பகிர்ந்து கொண்டது சட்டமன்றத்தில் தொகுதி மக்களுக்காக உரையாற்றியது எப்பொழுதுமே தமிழக மக்கள் சர்வீஸ் செய்பவர்களுக்கு மதிப்பு கொடுப்பார்கள் பணி செய்யவில்லை என்றால் உங்களை மதிக்க மாட்டார்கள். அவரது உழைப்பு அவருக்கு வெற்றியை தரும் என தெரிவித்தார்.