அண்ணாமலை புதிய இயக்கம் அரசியல் மாற்றத்தை ஏற்படுத்துமா என பார்ப்போம் - வானதி சீனிவாசன் பேட்டி!
பாஜக தேசிய மகளிர் அணி தலைவர் வானதி சீனிவாசன், திருச்சியில் இன்று செய்தியாளர்களை சந்தித்து பேசினார், அதில்:--
திருச்சியில் இன்று நடந்த கூட்டம் நல்லபடியாக இருந்தது. பிரதமராக 12 வருடங்கள் பாரத பிரதமர் நிறைவு செய்ததை ஒட்டி நடக்கக் கூடிய நிகழ்வுகள், யோகா தினம், வரக்கூடிய நாட்களில் பயிற்சி முகாம் நடத்தப்படுவது குறித்து ஆலோசனை கூட்டம் இன்று நடைபெற்றது. பாரதிய ஜனதா கட்சியில் இருந்து வெளியேறி போகின்றவர்கள் போகட்டும். அதில் சொல்வதற்கு ஒன்றும் இல்லை. அண்ணாமலை புதிய இயக்கம் அரசியல் மாற்றத்தை உருவாக்குமா என பார்ப்போம் என்றார்.