தமிழக முதல்வர் பிறந்தநாள் விழா; திருச்சியில் செயல் திட்ட அலுவலகம் திறப்பு - அன்னதானம் வழங்கி கொண்டாட்டம்!

MsdMsd
Jun 22, 2026 - 18:46
தமிழக முதல்வர் பிறந்தநாள் விழா; திருச்சியில் செயல் திட்ட அலுவலகம் திறப்பு - அன்னதானம் வழங்கி கொண்டாட்டம்!

தமிழக வெற்றி கழக தலைவரும், தமிழ்நாடு முதலமைச்சருமான ஜோசப் விஜய்யின் 52 வது பிறந்தநாளை முன்னிட்டு, தமிழகம் முழுவதும் கட்சித் தொண்டர்கள் மற்றும் நிர்வாகிகள் பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்கி உற்சாகமாக கொண்டாடி வருகின்றனர்.

இதன் ஒரு பகுதியாக, திருச்சி கிழக்கு தொகுதிக்குட்பட்ட 17-வது வார்டில் மாவட்ட நிர்வாகி ராக்போர்ட் ராஜேஷின் புதிய 'செயல் திட்ட அலுவலகம்' திறப்பு விழா மற்றும் அன்னதான நிகழ்ச்சி சிறப்பாக நடைபெற்றது.

இந்நிகழ்ச்சியில், மாவட்ட பொறுப்பாளர் குடமுருட்டி கரிகாலன் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு, ராக்போர்ட் ராஜேஷின் புதிய செயல் திட்ட அலுவலகத்தைத் திறந்து வைத்தார். அதனைத் தொடர்ந்து, ஏழை, எளிய மக்களுக்கு அன்னதானம் வழங்கும் நிகழ்ச்சியைத் தொடங்கி வைத்து, பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கினார். 

இந்த விழாவில் மாவட்ட மற்றும் பகுதி அளவிலான நிர்வாகிகள் பெருந்திரளாகக் கலந்து கொண்டனர். குறிப்பாக, மாவட்ட நிர்வாகிகள் பழக்கடை சி. சரவணன், பகுதி செயலாளர் சந்திரசேகர் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மேலும், நிர்வாகிகள் பிரகாஷ், வேலாயுதம் மாரி, மோகன்தாஸ், குமார் மற்றும் மகளிர் அணி நிர்வாகிகள் ஆர். கற்பகம், ஆறுமுகசெல்வி, சாலினி உள்ளிட்ட ஏராளமான கட்சித் தொண்டர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டு விழாவினைச் சிறப்பித்தனர். முதல்வரின் பிறந்தநாளை முன்னிட்டு நடைபெற்ற இந்த நிகழ்ச்சிகள், அப்பகுதி மக்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றது.