திருச்சியில் 100% வாக்குப்பதிவை வலியுறுத்தி விழிப்புணர்வு மனித சங்கிலி!
தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு, வாக்களிப்பதன் அவசியம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், மனித சங்கிலி நிகழ்ச்சி திருச்சி மாநகராட்சி அலுவலகம் முன்பு இன்று நடைபெற்றது. இதில் வருவாய் கோட்டாட்சியர் சாலை தவவளன், உதவி ஆணையர் கனகராஜ் ஆகியேர் கலந்து கொண்டு மனித சங்கிலியை தொடங்கி வைத்தனர். இந்நிகழ்வில் பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகள், சமூக ஆர்வலர்கள், தன்னார்வலர்கள், மாநகராட்சி ஊழியர்கள் உட்பட பலர் கலந்து கொண்டு, 100% வாக்குப்பதிவை வலியுறுத்தி விழிப்புணர்வு ஏறபடுத்தினர்.