திருச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த முதியவர் மாயம்!

MsdMsd
Mar 25, 2026 - 19:22
திருச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த முதியவர் மாயம்!

திருச்சி மாவட்டம் முசிறி ரத்தன நகரை சேர்ந்தவர் சேட்டு (வயது 70). இவர் காது கேளாதவர். இவருக்கு அடிக்கடி மூச்சு திணறல் ஏற்படும். இந்நிலையில் கடந்த 22ந் தேதி திருச்சி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த சேட்டு, நேற்று திடீரென்று மாயமாகி விட்டார். இது தொடர்பாக அவரது மனைவி சரோஜா அரசு மருத்துவமனை போலீசில் புகார் கொடுத்துள்ளார். புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து சேட்டுவை தேடி வருகின்றனர்.