திருச்சி உறையூரில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் சார்பில் மாபெரும் ரத்ததான முகாம் - ஆர்வமுடன் கலந்து கொண்ட கொடையாளர்கள்!
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் (TNTJ) அமைப்பின் சார்பில் பல்வேறு மாவட்டங்களில் ரத்ததான முகாம் நடத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில் இன்று திருச்சி மாவட்டம் உறையூர் கிளை சார்பில் மாபெரும் ரத்ததான முகாம் நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினராக உறையூர் காவல் ஆய்வாளர் பாலகிருஷ்ணன் கலந்துகொண்டு முகாமை தொடங்கி வைத்தார்.
இதில் அமைப்பின் நிர்வாகிகள், உறுப்பினர்கள், பொதுமக்கள், சமூக ஆர்வலர்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டு ஆர்வமுடன் ரத்ததானம் செய்தனர். குறிப்பாக மாற்றுத்திறனாளி குணசேகரன் என்பவர் ரத்ததானம் செய்தது பல்வேறு நபர்களுக்கு உந்துதலாக அமைந்தது.
அரசு மருத்துவமனை மருத்துவ அதிகாரிகளின் முழுமையான ஒத்துழைப்புடனும், வழிகாட்டுதலுடனும் மருத்துவ முகாம் சிறப்பாக ஒருங்கிணைக்கப்பட்டன. "ரத்தம் கொடுப்போம், மனிதநேயம் காப்போம்" என்ற உயரிய நோக்கத்துடன் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில், தகுதியான நபர்களுக்கு மருத்துவர்களின் முழுமையான மருத்துவப் பரிசோதனை மற்றும் ஆலோசனைகளுக்குப் பின்னரே ரத்தம் பெறப்பட்டது. எனவே, பொதுமக்கள் யாரும் ரத்ததானம் செய்ய எவ்வித அச்சமும் கொள்ளத் தேவையில்லை என்றும், இது ஒரு எளிய மற்றும் பாதுகாப்பான உயிர்காக்கும் செயல் என்றும் மருத்துவக் குழுவினர் அறிவுறுத்தினர்.