சுதந்திர தினத்தை முன்னிட்டு, திருச்சியில் பாஜக சார்பில் மூவர்ண கொடி பேரணி; ஏராளமானோர் பங்கேற்பு!

MsdMsd
Aug 14, 2026 - 16:05
சுதந்திர தினத்தை முன்னிட்டு, திருச்சியில் பாஜக சார்பில் மூவர்ண கொடி பேரணி; ஏராளமானோர் பங்கேற்பு!

இந்தியாவின் 80-வது சுதந்திர தின விழாவை முன்னிட்டு, பாரதிய ஜனதா கட்சி சார்பில் திருச்சியில் பிரம்மாண்டமான மூவர்ணக் கொடி பேரணி இன்று நடைபெற்றது. மாநகர் மாவட்டத் தலைவர் ஒண்டிமுத்து தலைமையில் நடைபெற்ற இப்பேரணியை, பாஜக மாநில இணைப் பொருளாளர் சிவசுப்பிரமணியன் தொடங்கி வைத்தார்.

திருச்சி மெயின் காடு கேட் பகுதியில் தொடங்கிய இந்தத் தேசிய கொடி பேரணி, முக்கிய வீதிகள் வழியாகச் சென்று காமராஜர் வளைவு வழியைத் தாண்டி, மரக்கடை காந்தி சிலை அருகில் நிறைவடைந்தது. பேரணியில் கலந்துகொண்டவர்கள் அனைவரும் கைகளில் தேசியக் கொடியை ஏந்தியவாறு முழக்கங்களை எழுப்பிச் சென்றனர்.

இந்த நிகழ்ச்சியில் மாவட்ட பொதுச்செயலாளர் காளீஸ்வரன், மாநிலத் துணைத் தலைவர் புவனேஸ்வரி, அரசு நலத்திட்ட பிரிவு மாநில நிர்வாகி முரளிதரன், எஸ்டி பிரிவு மாவட்டத் தலைவர் மணிவேல், ஊடகப் பிரிவு ஸ்ரீரங்கம் முரளிதரன் உள்ளிட்ட பாஜகவின் பல்வேறு அணிகளின் நிர்வாகிகளும், உறுப்பினர்களும் இந்நிகழ்ச்சியில் பெருந்திரளாக கலந்து கொண்டனர்.