காங்கிரஸ் தலைவர் கார்கேவுக்கு அவமதிப்பு; தீண்டாமை அரசியலை கண்டித்து திருச்சியில் காங்கிரஸ் கட்சியினர் சத்தியாகிரக போராட்டம்!
உத்தரகண்ட் மாநிலம் ஹல்திவானியில் உள்ள ராம்லீலா மைதானத்தில் கடந்த 8-ம் தேதி காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே பங்கேற்ற பொதுக்கூட்டம் நடைபெற்றது. கூட்டத்துக்குப் பின்னர் அந்த இடத்தை ஆர்.எஸ்.எஸ் அமைப்பினர் கங்கை நீரை கொண்டு சுத்தம் செய்துள்ளனர். இந்த தீண்டாமை சம்பவத்திற்கு கண்டனம் தெரிவித்து நாடு முழுவதும் இன்று ஆர்ப்பாட்டம் நடைபெறும் என, காங்கிரஸ் கமிட்டியின் தமிழ்நாடு மாநில தலைவர் மாணிக்கம் தாகூர் எம்பி அறிவித்திருந்தார்.
அதன் அடிப்படையில் திருச்சி மாவட்ட காங்கிரஸ் கமிட்டியின் சார்பில், தெப்பக்குளம் பகுதியில் உள்ள காந்தி சிலை முன்பு இன்று அமைதி வழியில் சத்தியாகிரக தர்ணா போராட்டம் நடைபெற்றது. போராட்டத்திற்கு மாநகர் மாவட்ட தலைவர் ரெக்ஸ் தலைமை வகித்தார். தெற்கு மாவட்ட தலைவர் ராஜலிங்கம், வடக்கு மாவட்ட தலைவர் தொட்டியம் சரவணன், மாநகர பொருளாளர் முரளி ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாநில செய்தி தொடர்பாளர் திருச்சி வேலுச்சாமி கண்டன உரையாற்றினர்.
மேலும் இந்த போராட்டத்தில் ஆராய்ச்சி பிரிவு மாநில பொதுசெயலாளர் பெஞ்சமின் இளங்கோ, மாவட்ட நிர்வாகிகள் ஷேக் தாவுத், விமல், கீர்த்தனா, அசோகன், அருண், கோட்ட தலைவர்கள் மலைக்கோட்டை வெங்கடேஷ் காந்தி, காட்டூர் ராஜா டேனியல் ராய், அரியமங்கலம் அழகர், மார்க்கெட் பகதுர்ஷா, சம்சுதின், உறையூர் பாக்கியராஜ், வரகனேரி இஸ்மாயில், ஏர்போர்ட் கனகராஜ், திருவனைக்கோவில் தர்மேஷ், அணித்தலைவர்கள் மகிளா காங்கிரஸ் அஞ்சு, குணசித்ரா, சக்தி அபியான் தோழி மாரீஸ்வரி, அமைப்பு சாரா பிரிவு மகேஷ், ஓபிசி பிரிவு ரியாஸ், இலக்கிய பிரிவு பத்மநாபன், கலைப்பிரிவு சுப்புராஜ், ஐடி பிரிவு கிளமெண்ட், வழக்கறிஞர் பிரிவு சில்வஸ்டர், பொறியாளர் அணி இம்ரான், வார்டு தலைவர்கள் பாலாஜி, தினேஷ், மணிமேகலை, மாதவன், வெங்கடேஷ், விஜி, சரவணன், பெரியசாமி, பூபாலன், ரமேஷ், செபாஸ்தியர், அபிராகாம், சரவணன், ரஃபிக், லட்சுமணன், ஜஹிர்உசேன், அபுதாகிர், சிவகுமார், பால்சாமி, சோனராமநாதன், வார்டு நிர்வாகிகள் வடக்கு மாவட்ட நிர்வாகிகள் செல்லப்பன், மகிழ காங்கிரஸ் கோகிலா, IT wing பாபு ஜெயராஜ், எஸ் சி துரை சிவசாமி, கலைவிரிவு பிரசன்னா, சேவாதளம் விக்னேஷ், விவசாய அணி ஆனந்தன்,RTI முகுந்தன், விஷ்ணுபிரபு, இளைஞர் காங்கிரஸ் கோபி கிருஷ்ணன், வட்டார தலைவர்கள் மணிமாறன், அலெக்சாண்டர், ரவிசங்கர், நகர தலைவர்கள் ராமநாதன், ஜெயபிரகாஷ்,சரத், வெங்கட், ஆனந்த், ராஜேஷ் சபியுல்லா, ரித்தீஷ் தெற்கு மாவட்ட நிர்வாகிகள் கோவிந்தராஜன், ஆனந்தன், முருகேசன், கிருஷ்ணமுர்த்தி, கனகராஜ், கருணாகரன், சிவசண்முகம், சத்தியசீலன், சிங்காரவேலன், தமிழரசன், சந்திரன், சரோஜா, நிஜாம், தாமோதரன், ராமசாமி, சுப்பையா, தனசேகர், அல்லிமுத்து, கதிர்வேல், பிரபு, மனோ, சிவகுமார் மற்றும் காங்கிரஸ் கட்சியின் அனைத்து அணி நிர்வாகிகள், உறுப்பினர்கள் திரளாக கலந்து கொண்டு தீண்டாமைக்கு எதிராகவும், ஆர்.எஸ்.எஸ் அமைப்பை கண்டித்தும் கண்டன கோஷங்களை எழுப்பினர்.