அகில இந்திய குயவர் உரிமை கட்சியின் தேசிய தலைவர் சாலை சாதியன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-- வருகிற 2026ம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் அ.தி.மு.க சார்பில் வெளியிட்டுள்ள தேர்தல் அறிக்கையில் அகில இந்திய குயவர் உரிமை கட்சியின் கோரிக்கைகளை ஏற்று குயவர் சமுதாய மக்களின் வாழ்வாதாரத்திற்கான மண்பாண்ட தொழிலாளர்களின் முக்கிய தொழிலான நாட்டு செங்கல் சூளை மண் அள்ள 80 யூனிட்டிலிருந்து 150 யூனிட்டாக உயர்த்தி வழங்கப்படும் என்பதும், மண்பாண்ட தொழிலாளர்களின் மழைக்கால நிவாரணநிதி 5 ஆயிரத்தில் இருந்து உயர்த்தி வழங்கப்படும், மண்பாண்ட தொழிலாளர்கள் நலவாரியத்தில் விடுபட்ட தொழிலாளர்களை உறுப்பினர்களாக சேர்க்கப்படும் போன்ற மகத்தான அறிவிப்புகளை வெளியிட்ட அ.தி.மு.க கழக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமிக்கும், விருதுநகர் மாவட்ட கழக செயலாளர் முன்னாள் அமைச்சர் கேடி.ராஜேந்திர பாலாஜிக்கும், விருதுநகர் மாவட்ட ஜெயலலிதா பேரவை துணைசெயலாளர் பெருமாள்பிச்சைக்கும், தேசிய ஜனநாயக கூட்டணியின் கட்சிகளுக்கும் எங்கள் சமுதாயத்தின் சார்பாகவும், அகில இந்திய குயவர் உரிமை கட்சியின் சார்பாகவும், மனமார்ந்த நன்றியினை தெரிவித்துக் கொள்கிறேன் என அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார்.