திருச்சியில் விசித்ரா மேக் ஓவர் ஆர்டிஸ்ட்ரி சார்பில் 4-ஆம் ஆண்டு மாநில அளவிலான அழகுப் போட்டி!
திருச்சி மொராய் சிட்டியில், விசித்ரா மேக் ஓவர் ஆர்டிஸ்ட்ரி சார்பில் 4-ஆம் ஆண்டு மாநில அளவிலான மிஸ், மிஸ்டர் மற்றும் மிஸஸ் ஜூனியர் அழகுப் போட்டி (Pageant Show) கோலாகலமாக நடைபெற்றது.
அழகு, திறமை மற்றும் தன்னம்பிக்கையை வெளிப்படுத்தும் வகையில் நடைபெற்ற இப்போட்டியில், திருச்சி மட்டுமின்றி பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த போட்டியாளர்கள் ஆர்வமுடன் கலந்து கொண்டனர். திருமணமான பெண்கள் உள்ளிட்ட பலரும் பங்கேற்று தங்களது திறமைகளை வெளிப்படுத்தினர்.
போட்டியின் ஒரு பகுதியாக, தமிழர்களின் பாரம்பரிய உடையான சேலையில் போட்டியாளர்கள் ஒய்யார நடைபோட்டு (Ramp Walk) பார்வையாளர்களை வெகுவாகக் கவர்ந்தனர். உடை அலங்காரம், நடை, தோற்றம், தன்னம்பிக்கை உள்ளிட்ட பல்வேறு அம்சங்களின் அடிப்படையில் போட்டியாளர்களின் திறமைகள் வெளிப்படுத்தப்பட்டன.
இப்போட்டியில் வெற்றி பெறும் போட்டியாளர்களுக்கு மாநில அளவில் மட்டுமின்றி தேசிய அளவிலான அழகுப் போட்டிகளில் பங்கேற்கும் வாய்ப்புகளும் ஏற்படுத்தித் தரப்படுவதாக விழாக்குழுவினர் தெரிவித்தனர். மேலும், திறமையான போட்டியாளர்களுக்கு திரைத்துறையில் வாய்ப்புகளை உருவாக்கித் தருவதற்கான முயற்சிகளும் மேற்கொள்ளப்படுவதாக கூறப்பட்டது.
விசித்ரா மேக் ஓவர் ஆர்டிஸ்ட்ரி நிறுவனர் விசித்ரா ஏற்பாடு செய்திருந்த இந்நிகழ்ச்சியில், சினிமா நட்சத்திரங்கள் சசி லயா மற்றும் தியா ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டு, போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு சான்றிதழ்களை வழங்கி பாராட்டினர்.
நிகழ்ச்சியில் அழகுத்துறை மற்றும் கலைத்துறையைச் சேர்ந்தவர்கள், போட்டியாளர்களின் குடும்பத்தினர், நண்பர்கள் மற்றும் திரளான பொதுமக்கள் கலந்து கொண்டு போட்டியாளர்களை உற்சாகப்படுத்தினர். அழகு மட்டுமின்றி தன்னம்பிக்கை, தனித்திறமை மற்றும் மேடைத் திறனை வெளிப்படுத்தும் வகையில் நடைபெற்ற இந்த 4-ஆம் ஆண்டு பேஜன்ட் ஷோ, திருச்சியில் சிறப்பான வரவேற்பைப் பெற்றது.