திருச்சி ஜோய்ஆலுக்காஸ் ஷோரூமில் "பிரில்லியன்ஸ் டைமண்ட் ஜுவல்லரி ஷோ" - ₹1 லட்சத்திற்கு மேல் டைமண்ட் நகைகள் வாங்குவோருக்கு இலவச தங்க நாணயம்!
ஜோய்ஆலுக்காஸ், உலகின் ஃபேவரிட் ஜூவல்லர்ஸ், சார்பில் திருச்சி ஷோரூமில் ‘பிரில்லியன்ஸ் டைமண்ட் ஜுவல்லரி ஷோ’ தொடங்கியுள்ளது. ஆகஸ்ட் 29, 2026 முதல் செப்டம்பர் 13, 2026 வரை நடைபெறும் இந்தச் சிறப்புக் கண்காட்சி, வைர நகைகளின் கைவினைத்திறன், நேர்த்தி மற்றும் புதுமையை ஒரே இடத்தில் காட்சிப்படுத்துகிறது.
திருச்சி மெயின்கார்டுகேட் பகுதியில அமைந்துள்ள ஜோய் ஆலுக்காஸ் ஜூவல்லரியில் இன்று நடைபெற்ற நிகழ்வில் சின்னத்திரை நடிகை அன்ஷிதா கலந்துகொண்டு வைர நகைகளை அறிமுகம் செய்து வைத்தார். மேலும் இந்த நிகழ்வில் ஜோய் ஆலுக்காஸ் குழுமத்தின் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குநர் டாக்டர்.ஜோய் ஆலுக்காஸ் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
மணமகள் முதல் அன்றாட பயன்பாடு வரை
இந்தக் கண்காட்சியில் மணமகளுக்கான பிரமாண்டமான வைர நகைத் தொகுப்புகள் முதல், அன்றாடம் அணிய ஏற்ற நவீன டிசைன்கள் வரை பல்வேறு பிரத்யேக வடிவமைப்புகள் இடம்பெற்றுள்ளன. வைரங்களின் காலத்தால் அழியாத பாரம்பரியத்தையும், நவீன அழகியலையும் இணைக்கும் வகையில் உருவாக்கப்பட்டுள்ள ஒவ்வொரு நகை வடிவமைப்பும் தனித்துவமானதாக அமைந்துள்ளது. மேலும், இந்த பிரத்யேக வடிவமைப்புகள் கண்காட்சி நடைபெறும் குறுகிய காலத்திற்கு மட்டுமே கிடைக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
டாக்டர். ஜோய்ஆலுக்காஸ் கருத்து
இதுகுறித்து ஜோய்ஆலுக்காஸ் குழுமத்தின் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குநர் டாக்டர். ஜோய்ஆலுக்காஸ் கூறுகையில், “‘பிரில்லியன்ஸ் டைமண்ட் ஜுவல்லரி ஷோ’ என்பது வைரங்களின் மீதுள்ள பெருமைக்கும், நகை வடிவமைப்பில் முழுமைத்தன்மையை நோக்கிய எங்கள் அர்ப்பணிப்பிற்கும் உள்ள தொடர்பை விவரிக்கும் ஓர் நிகழ்வாகும். திருச்சி எங்கள் இதயத்தில் தனித்துவமான இடத்தைப் பெற்றுள்ளது. திருவிழா காலத்தை முன்னிட்டு இந்தக் கண்காட்சி நடைபெறுகிறது. அழகு, தனித்துவம் மற்றும் சிறந்த கைவினைத்திறனை பிரதிபலிக்கும் பிரத்யேக வடிவமைப்புகளை வாடிக்கையாளர்கள் கண்டறிய ஓர் அரிய வாய்ப்பை வழங்கும்” என்றார்.
₹1 லட்சத்திற்கு மேல் வாங்கினால் இலவச தங்க நாணயம்!
இந்தச் சிறப்பு நிகழ்வை முன்னிட்டு வாடிக்கையாளர்களுக்கு சிறப்பு சலுகையும் அறிவிக்கப்பட்டுள்ளது. கண்காட்சி நடைபெறும் காலத்தில் ₹1 லட்சம் மற்றும் அதற்கு மேற்பட்ட மதிப்பில் டைமண்ட் நகைகள் வாங்கும் வாடிக்கையாளர்களுக்கு இலவச தங்க நாணயம் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
செப்டம்பர் 13 வரை கண்காட்சி ‘பிரில்லியன்ஸ் டைமண்ட் ஜுவல்லரி ஷோ’ செப்டம்பர் 13, 2026 வரை திருச்சி ஜோய்ஆலுக்காஸ் ஷோரூமில் பிரத்தியேகமாக நடைபெறுகிறது. ஆடம்பரம், அன்பு மற்றும் காலத்தால் அழியாத அழகின் கதைகளை சொல்லும் அற்புதமான டைமண்ட் உலகத்தை நேரில் கண்டு ரசிக்க அனைத்து வாடிக்கையாளர்களும் அன்புடன் அழைக்கப்படுகிறார்கள்.